கராச்சி அல்வா

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#இனிப்பு வகைகள்

கார்ன்ஃப்ளோர் கொண்டு செய்யப்படும் அல்வா. மிகவும் சுவையான ஒன்று. பண்டிகைக் காலங்களில் செய்வதற்கு ஏற்றது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பேருக்கு
  1. 1 கப் கார்ன்ஃப்ளோர்
  2. 2 கப் சீனி
  3. 4 கப் தண்ணீர்
  4. 3/4 கப் நெய்
  5. 2 மேசைக்கரண்டிநறுக்கிய பாதாம் துண்டுகள்
  6. 1 சிட்டிகை குங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கப் கார்ன்ஃப்ளோரை இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

  2. 2

    இரண்டு கப் தண்ணீரை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

  3. 3

    தண்ணீர் கொதித்ததும் கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளோர் சேர்த்து கை விடாமல் கிளறவும்.

  4. 4

    கார்ன் ஃப்ளோர் வெந்து நிறம் மாறியதும் (glossy texture) இரண்டு கப் சீனி சேர்க்கவும்.

  5. 5

    சீனி கரைந்ததும் ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்துக் கிளறவும்.

  6. 6

    அவ்வப்போது ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்துக் கிளறவும்.

  7. 7

    சிட்டிகை குங்குமப்பூவை ஒரு மேசைக்கரண்டி வெதுவெதுப்பான பாலில் ஊறவைத்து சேர்க்கவும்.

  8. 8

    அல்வா நன்கு சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி ஒரு தட்டில் பரத்தவும்.

  9. 9

    நறுக்கிய பாதாம் துண்டுகள் தூவி ஒரு மணிநேரம் ஆறவைத்து பின் துண்டுகள் போடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes