சுரைக்காய் காரவடை

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#பொரித்த வகை உணவுகள்
சுரைக்காய் மற்றும் பருப்பு வகைகள் சேர்த்த வடை. சுரைக்காய் உடல் எடையை குறைப்பதற்கும் , கொலஸ்டிராலை கட்டுப்படுத்தவும் உதவும் என்பதால் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

80 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் துருவிய சுரைக்காய்
  2. 1 கப் கடலைப்பருப்பு
  3. 1/4 கப் துவரம்பருப்பு
  4. 2 பச்சை மிளகாய்
  5. 3 மிளகாய் வற்றல்
  6. 1 டீஸ்பூன் சீரகம்
  7. 1/2 டீஸ்பூன் பெருங்காயம்
  8. தேவையான அளவு உப்பு
  9. கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை
  10. தேவையான அளவுடீப் ஃப்ரை செய்ய எண்ணெய்

சமையல் குறிப்புகள்

80 நிமிடங்கள்
  1. 1

    பருப்பு வகைகளை சேர்த்து தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    சுரைக்காயை தோல் சீவி துருவி கொள்ளவும்

  3. 3

    ஊறிய பருப்பை தண்ணீர் வடித்து விட்டு மிக்சியில் போட்டு அதனுடன் மிளகாய் வற்றல்,சீரகம்,உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்

  4. 4

    அரைத்த மாவுடன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் துருவிய சுரைக்காய் பிழிந்து சேர்த்து கலந்து கொள்ளவும்

  5. 5

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடைகளாக தட்டி போட்டு மிதமான தீயில் பொரிக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
அன்று
Chennai
Iam passionate about cooking traditional and healthy receipes. I like to try innovative receipes.
மேலும் படிக்க

Similar Recipes