கோபி மஞ்சூரியன்

Vedha Priya
Vedha Priya @cook_16956435
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 பூகாலிபிளவர் – (மீடியம் சைஸ்)
  2. 1குடைமிளகாய் – (மீடியம் சைஸ்)
  3. ¼ கிலோகடலை மாவு
  4. 3 ஸ்பூன்பச்சரிசி மாவு
  5. 4 ஸ்பூன்கார்ன்பிளார் மாவு
  6. தேவையான அளவுஉப்பு
  7. தேவையான அளவுஎண்ணெய் – பொரித்தெடுக்கத்
  8. 1 (பெரியது)பல்லாரி வெங்காயம்
  9. 2 தக்காளி (பெரியது)
  10. 2 பச்சை மிளகாய் – (மீடியம் சைஸ்)
  11. 6 பற்கள் வெள்ளைப் பூண்டு –பெரியது)
  12. 3 கீற்றுகறிவேப்பிலை
  13. 7 கொத்துகொத்தமல்லி இலை
  14. 5 ஸ்பூன்நல்ல எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் காலிபிளவர் பூவினை இதழ்களாக ஒடித்துக் கொள்ளவும்.
    வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதில் சிறிதளவு உப்பினைச் சேர்த்து அடுப்பினை அணைத்து விடவும்.

  2. 2

    இப்போது இதழ்களாக ஒடித்து வைத்துள்ள காலிபிளவரை தண்ணீரில் சேர்த்து பாத்திரத்தை மூடி விடவும். 10 நிமிடங்கள் கழித்து காலிபிளவர் இதழ்களை தண்ணீரை விட்டு வெளியே எடுத்து விடவும்.

  3. 3

    பல்லாரி வெங்காயத்தை தோலுரித்து சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

    தக்காளியைக் கழுவி மிக்ஸியில் போட்டு மையமாக அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    பச்சை மிளகாயையும் அலசி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

    வெள்ளைப்பூண்டினை தோலுரித்து குறுக்கு வாக்கில் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

  5. 5

    கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி உருவிக் கொள்ளவும்.
    மல்லி இலையை ஆய்ந்து சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  6. 6

    குடைமிளகாயையும் அலசி சிறுசிறு சதுரத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
    கார்ன் பிளார் மாவினை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைசலாகக் கரைத்துக் கொள்ளவும்.

  7. 7

    கடலை மாவு, பச்சரிசி மாவு, தேவையான உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து வடைமாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
    வாணலியில் தேவையான எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் காலிபிளவர் இதழ்களை வடைமாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

  8. 8

    வாயகன்ற பாத்திரத்தில் 5 ஸ்பூன் நல்லெண்ணை விட்டு அதில் சதுரங்களாக நறுக்கிய பல்லாரி வெங்காயம், குறுக்குவாக்கில் நறுக்கிய வெள்ளைப்பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
    வெங்காயம் பாதிபதம் வெந்த பின் அதனுடன் சதுரங்களாக நறுக்கிய குடைமிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

  9. 9

    இரண்டு நிமிடம் கழித்து தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.
    ஒரு நிமிடம் கழித்து பச்சை மிளகாய் சாறு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கிய பின் கார்ன்பிளார் கரைசலைச் சேர்க்கவும்.
    அரைநிமிடத்தில் பொரித்து வைத்துள்ள காலிபிளவர் வடைகளைச் சேர்க்கவும்.

  10. 10

    கலவையை ஒரு சேரக் கிளறிவிட்டு, அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து அடுப்பினை அணைத்து விடவும்.

    சுவையான கோபிமஞ்சூரியன் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vedha Priya
Vedha Priya @cook_16956435
அன்று

Similar Recipes