மீன் சம்பல் (Meen Sambal Recipe in TAmil)
அசைவ உணவு வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
மீன் துண்டுகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- 2
பூண்டினை தோல் உரித்து கொள்ளவும்.
- 3
வற்றல் மிளகாயை வெந்நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து எடுக்கவும்.
- 4
இரண்டு தக்காளி, இரண்டு வெங்காயத்தை எடுத்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 5
மீன் துண்டுகளை மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து பிரட்டி வைத்து சுமார் பத்து நிமிடங்கள் ஊற விடவும்.
- 6
ஊற வைத்த மிளகாயுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 7
மீதமுள்ள மூன்று வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். மீதமுள்ள மூன்று தக்காளிகளையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 8
வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் தூளில் பிரட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 9
மீன் துண்டுகள் அனைத்தையும் பொரித்து எடுக்கவும்.
- 10
ஒரு வாணலி அடுப்பில் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நீள வாக்கில் நறுக்கிய வெங்காயத்தையும், அரைத்த மிளகாய் விழுதையும் போட்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
- 11
வெங்காயமும்,விழுதும், ஒன்றாய் சேர்ந்து நன்கு வதங்கிய பிறகு நறுக்கிய தக்காளி, அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.
- 12
பிறகு, அதனுடன் தேங்காய் பால் ஊற்றி பிரட்டி விட்டு அதில் பொரித்து எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு லேசாக பிரட்டி விடவும்.
- 13
வாணலியை ஒரு மூடி கொண்டு மூடி விட்டு சுமார் ஒரு நிமிடம் வேக விடவும். தீயின் அளவு மிதமாகவும், சீராகவும் இருக்க வேண்டும்.
- 14
ஒரு நிமிடம் கழித்து மூடியைத் திறந்து எலுமிச்சைப் பழத்தை பிழிந்து விட்டு மேலும் மூன்று நிமிடம் மூடி வைக்கவும்.
- 15
அதன் பிறகு மூடியை திறந்து மீன் உடைந்து விடாமல் கவனமாக பிரட்டி விட்டு இறக்கி விடவும்.இதனை சூடு சோறுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வஞ்சரம் மீன் தலை குழம்பு (Vanjaram Meen Thalai Kulambu Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்sumaiya shafi
-
-
செட்டிநாடு வஞ்சரம் மீன் வறுவல்(மசாலா அரைத்து) (Vanjaram meen varuval recipe in tamil)
அசைவ உணவு வகைகள்sumaiya shafi
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் மீன் ஃப்ரை (hotel style meen fry recipe in tamil)
#bookசுவையான சத்தான மீன் வகைகள் எல்லோராலும் விரும்ப கூடிய உணவு வகை. Santhanalakshmi -
-
-
-
-
மீன் கறி (Meen curry recipe in tamil)
#ap பொம்மிடாயிலா புலுசு அல்லது மீன் கறி என்பது நன்கு அறியப்பட்ட ஆந்திர உணவு வகைகள். இது கடல் உணவு ஆர்வலர்களுக்கு பிடித்தது மற்றும் எனது குடும்பத்திற்கும் பிடித்தது #ap Christina Soosai -
-
-
இறால் அடைக்கப்பட்டஇட்லி, மீன் குழம்பு, இறால் மசாலா (Iral food Recipe in Tamil
# அசைவ உணவுகள் Shanthi Balasubaramaniyam -
-
-
-
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும் Shabnam Sulthana -
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
-
-
கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil)
#Thechefstory #atw3 Asma Parveen -
-
More Recipes
கமெண்ட்