😋 காளான் சுக்கா, mushroom chukka Recipe in Tamil)😋

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409

#பன்னீர்/மஷ்ரூம்

😋 காளான் சுக்கா, mushroom chukka Recipe in Tamil)😋

#பன்னீர்/மஷ்ரூம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3-4பேர்
  1. 400 கிராம்பட்டன் காளான்
  2. 20சின்ன வெங்காயம்
  3. 1 டேபிள்ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  4. 1 கொத்துகறிவேப்பிலை
  5. 1தக்காளி
  6. தேவையான அளவுஎண்ணெய்
  7. 1பட்டை, கிராம்பு,அன்னாசி பூ, ஏலக்காய்- தலா
  8. 5-6வரமிளகாய்
  9. ஒரு டீஸ்பூன்மல்லி, மிளகு, சீரகம், சோம்பு -தலா
  10. மஞ்சள் தூள்
  11. தேவையானஅளவுஉப்பு
  12. 10முந்திரி- (தேவைப்பட்டால்)

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எண்ணெய் சேர்க்காமல் வெறும் வாணலியில் வறுத்து எடுத்து நன்கு பொடித்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து எண்ணை காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி ஐந்து நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும்.

  4. 4

    தக்காளி நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து நறுக்கிய காளானை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விடவும்.

  5. 5

    காளானில் உள்ள தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து மேலும் விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து விடவும். சுவையான மஷ்ரூம் சுக்கா தயார் 😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409
அன்று

Similar Recipes