மேத்தி ரொட்டி (Methi Roti Recipe in Tamil)

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

#இந்தியன் பிரட் உணவு வகைகள்இது பஞ்சாபில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் விரும்பி சாப்பிடக்கூடிய ரொட்டி வகைகளில் புதுமையான மேத்தி ரொட்டி இது.#masterclass #punjabifood.#goldenapron2.0

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 400 கிராம்கோதுமை மாவு
  2. அரைடீஸ்பூன்மஞ்சள் தூள்
  3. ஒரு டீஸ்பூன்கஸ்தூரி மேத்தி
  4. தேவையான அளவுஉப்பு
  5. தேவையான அளவுதண்ணீர்
  6. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மேத்தி ரொட்டி செய்வதற்கு இப்போ ஒரு பார்க்கிற்கு எடுத்துக்கோங்க அதுல 400 கிராம் அளவுக்கான கோதுமை மாவில் போடவும்.

  2. 2

    கோதுமைமாவு சேர்த்ததற்கு அப்புறமாக ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்கான கஸ்தூரி மேத்தி அதில் சேர்க்கவும். ஒரு பெரிய சைஸ் டேபிள் ஸ்பூன் உள்ள சேர்த்தால் போதுமானது. இப்பொழுது அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

  3. 3

    மஞ்சள் தூள் சேர்த்து அதற்கு பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்பொழுது தண்ணீர் சிறுக சிறுக விட்டு சப்பாத்தி மாவு பதம் அளவிற்கு பிசைந்து எடுத்து கொள்ளவும்.

  4. 4

    மாவு கலவையை பிசைந்து வைத்து விட்டு ஒரு 15 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். 15 நிமிடங்கள் அப்புறமாக திரும்பவும் அதை நன்கு பிசைந்து உருண்டைகளாக்கி. சப்பாத்தி போல் குழந்தைகளை வைத்து விடவேண்டும் சப்பாத்தி பரோட்டா சிறிதளவு திக்காக இருக்க வேண்டும். அதுதான் பதம் சிறிது கடினமாக இருக்கவேண்டும் அதை எல்லாவற்றையும் திருத்தி தோசை தவாவில் போட்டு சுட்டு எடுத்தால் நம்ம மேத்தி ரொட்டி தயாராகிவிட்டது.

  5. 5

    முக்கியமாக ரொட்டியை சுடும்போது எண்ணெய் சேர்க்க வேண்டாம்.எண்ணெய் சேர்க்காமல் சுட்டு எடுத்துவிட்டு சாப்பிடுவதற்கு முன் அதன் மேல் நெய்யை காய்ச்சி நன்கு தடவி விட்டு சூட்டில் நீங்கள் ஊற்றினால் அது உருகிவிடும் நன்கு அதை தடவி விட்டு. பரிமாறலாம் இதனுடன் உருளைக்கிழங்கும் இல்லை எனி கிரேவியுடன் நன்றாக இருக்கும் அல்லது சின்ன வெங்காயத்துடன் தயிருடன் சாப்பிட ரொம்பவே நல்லது.

  6. 6

    சுவையான மற்றும் ஹெல்தியான நம்ப மேத்தி ரொட்டி இப்பொழுது சாப்பிட தயார் பண்ணி பாருங்க. நன்றி வணக்கம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Akzara's healthy kitchen
அன்று

Similar Recipes