கொள்ளு இட்லி

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#ஆரோக்கியஉணவு

"கொழுத்தவனுக்குக் கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு" என்பது பழமொழி. உடல் எடையைக் குறைக்க கொள்ளு அவசியம். கொள்ளை துவையல், கடையல், ரசம், இட்லி செய்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப் - கொள்ளு
  2. 1/2கப் - இட்லி அரிசி
  3. 4மேசைக்கரண்டி - உளுந்தம் பருப்பு
  4. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கொள்ளைக் கழுவி எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    அரிசி, உளுந்தம் பருப்பு கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    கொள்ளு ஊறியதும் அதோடு ஊறிய அரிசி, பருப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.

  5. 5

    எட்டு மணி நேரம் கழித்து மாவு பொங்கியதும் இட்லித் தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

  6. 6

    விரும்பிய சட்னி, சாம்பாரோடு பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (3)

Muniswari G
Muniswari G @munis_gmvs
இந்த கொள்ளு இட்லி மாவுடன் வெந்தயம் சேர்த்து அரைக்கலாமா? ஏனென்றால் கொள்ளு கொஞ்சம் உடலுக்கு அதிக சூட்டை ஏற்படுத்தும்ன்னு சொல்லுவாங்க... அதனால தான் கேட்டேன்... அப்படி வெந்தயம் சேர்த்து அரைக்கலாமான்னு சொல்லுங்க மா...

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes