ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

#பார்ட்டி
வருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபி
முயற்சி செய்து பாருங்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

6 மணி நேரம்
20 பரிமாறுவது
  1. கேக் செய்ய:
  2. 300கிராம் மைதா
  3. 300கிராம் பொடித்த சர்க்கரை
  4. 300கிராம் உப்பில்லாத வெண்ணெய்
  5. 2ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1ஸ்பூன் பேக்கிங் சோடா
  7. 2சிட்டிகை உப்பு
  8. 5முட்டை
  9. 2ஸ்பூன் வெனிலா எசென்ஸ்
  10. 100மில்லி பால்
  11. ரசமலாய் செய்ய
  12. 500கிராம் ப்ரஷ் பனீர்
  13. 1_1/2 கிலோ சர்க்கரை
  14. சிறிதுரோஸ் வாட்டர்
  15. ரபடி செய்ய:
  16. 1லிட்டர் பால்
  17. 200மில்லி மில்க்மெயின்ட்
  18. 1ஸ்பூன் ஏலத்தூள்
  19. 1கிராம் குங்குமப்பூ
  20. ஐசிங் செய்ய:
  21. 200கிராம் பட்டர்
  22. 400கிராம் ஐசிங் சுகர்
  23. 1ஸ்பூன் வெனிலா எசென்ஸ்
  24. அலங்கரிக்க:
  25. 1/4கப் கேரமல் ஃபீஸ்
  26. குங்குமப்பூ
  27. சிரப் செய்ய:
  28. 1கப்சர்க்கரை
  29. 1/4கப் தண்ணீர்
  30. சிறிதுரோஸ் வாட்டர்

சமையல் குறிப்புகள்

6 மணி நேரம்
  1. 1

    கேக் செய்ய:

  2. 2

    மைதா உடன் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து இரண்டு முறை ஜலித்து கொள்ளவும்

  3. 3

    கேக் ட்ரேயில் பட்டர் தடவி பட்டர் பேப்பர் விரித்து அதன் மேல் மீண்டும் பட்டர் தடவி மைதா டஸ்ட் செய்து ரெடியாக வைக்கவும்

  4. 4

    முட்டை ஐ வெள்ளை கரு தனியாக மஞ்சள் கரு தனியாக பிரித்து வைக்கவும்

  5. 5

    வெள்ளை கருவை ஐஸ்கிரீம் பதத்தில் நன்கு அடித்து (பீட் செய்து) வைக்கவும்

  6. 6

    பாத்திரத்தில் இருந்து எடுத்தால் அப்படியே பஞ்சு போல் இருக்க வேண்டும் வெள்ளை கருவை அடிப்பது மிகவும் முக்கியமானது கவனமாக செய்ய வேண்டும்

  7. 7

    மஞ்சள் கரு உடன் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு தனியாக பீட் செய்யவும்

  8. 8

    ஓவனை 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பத்து நிமிடங்கள் வரை சூடாக்கவும்

  9. 9

    பின் பட்டர் உடன் பொடித்த சர்க்கரை ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்

  10. 10

    பின் அடித்து வைத்துள்ள மஞ்சள் கருவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்

  11. 11

    பின் அடித்து வைத்துள்ள வெள்ளை கருவை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொள்ளவும்

  12. 12

    அதிகம் பீட் செய்ய வேண்டாம்

  13. 13

    பின் பீட் செய்வதை நிறுத்தி விட்டு ஜலித்து வைத்துள்ள மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து ஒரு புறமாக கலந்து கொள்ளவும்

  14. 14

    ஒரு புறமாக மட்டும் கலக்கவும் அப்போது தான் காற்று குமிழிகள் உள் நின்று கேக் மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும்

  15. 15

    பின் பாலை சிறிது சிறிதாக சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்

  16. 16

    பின் ரெடியாக உள்ள ட்ரேயில் கொட்டி சமப்படுத்தி சூடான ஓவனில் வைத்து 170 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்

  17. 17

    மூன்று மணி நேரம் வரை ஆறவிடவும்

  18. 18

    ரசமலாய் செய்ய:

  19. 19

    பனீரை நன்கு பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்

  20. 20

    சர்க்கரை ஐ அளந்து அது ஒரு கப் என்றால் தண்ணீர் 4 கப் (1:4 என்ற விகிதத்தில்)சேர்த்து ஏலத்தூள் கலந்து கொதிக்க விடவும்

  21. 21

    பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துள்ள பனீரை சேர்த்து மூடி வைத்து 25 நிமிடங்கள் வரை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும்

  22. 22

    பின் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து இரண்டு மணி நேரம் வரை சர்க்கரை பாகில் ஊறவிடவும்

  23. 23

    ரபடி செய்ய:

  24. 24

    பால் ஐ அடுப்பில் வைத்து பாதியாக சுண்டி வரும் வரை கொதிக்க விடவும்

  25. 25

    பின் குங்குமப்பூ உடன் சிறிது பால் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்

  26. 26

    பின் 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை மற்றும் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும்

  27. 27

    பின் குங்குமப்பூ கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்

  28. 28

    பின் சர்க்கரை பாகில் இருந்து பனீரை வடிகட்டி எடுத்து பாலுடன் சேர்த்து ஐந்து நிமிடம் வரை கொதித்ததும் இறக்கவும்

  29. 29

    பின் ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை குளிரவிடவும்

  30. 30

    பின் ஐசிங் செய்ய:

  31. 31

    சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து (1/4 கம்பி பதம்)கொதிக்க விட்டு ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  32. 32

    பட்டர் உடன் ஐசிங் சுகர் ஐ சிறிது சிறிதாக சேர்த்து வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும்

  33. 33

    கேக் ஐ மூன்று பீஸாக (லேயராக) கட் செய்து கொள்ளவும்

  34. 34

    பின் ஒரு ஃபீஸ் மீது சர்க்கரை சிரப் ஐ ஊற்றவும்

  35. 35

    பின் அதன் மேல் ரெடியாக உள்ள ஐசிங் ஐ தடவவும்

  36. 36

    பின் ரசமலாய் ரபடியை சிறிது ஊற்றி சிறிது ரசமலாய் ஐ அடுக்கும்
    பின் அதன் மேல் அடுத்த லேயர் கேக் ஃபீஸ் வைத்து அழுத்தி விடவும்

  37. 37

    பின் மீண்டும் சுகர் சிரப் ஐ ஊற்றவும்

  38. 38

    பின் மீண்டும் ஐசிங் ஐ தடவவும்

  39. 39

    பின் மீண்டும் சிறிது ரசமலாய் ரபடியை ஊற்றவும் மீண்டும் சிறிது ரசமலாய் ஐ அடுக்கவும்

  40. 40

    பின் மீண்டும் அடுத்த லேயர் கேக் ஃபீஸ் ஐ வைத்து அழுத்தி விடவும்

  41. 41

    பின் இப்போது கேக் மேல் புறம் மட்டும் இல்லாமல் கேக் முழுவதும் ஐசிங் ஐ தடவவும்

  42. 42

    பின் மேல் ரபடி ஐ தவிர்த்து ரசமலாய் ஐ மட்டும் அடுக்கவும்

  43. 43

    இறுதியாக நட்ஸ் ஐ தூவி குங்குமப்பூ தூவி விரும்பிய வாறு அலங்கரிக்கவும்

  44. 44

    பின் பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வரை குளிரவிட்டு பரிமாறவும்

  45. 45

    சுவையான மணமான ரசமலாய் கேக் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes