ப்ளம் கேக்(plum cake recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

#CF9
எனக்கு ப்ளம் கேக் என்றால் அவ்வளவு இஷ்டம். அதற்காக ரெசிபி தேடியபோது கிடைத்தது. மிகவும் அருமையாக வந்தது. சுவை சூப்பர். எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது.

ப்ளம் கேக்(plum cake recipe in tamil)

#CF9
எனக்கு ப்ளம் கேக் என்றால் அவ்வளவு இஷ்டம். அதற்காக ரெசிபி தேடியபோது கிடைத்தது. மிகவும் அருமையாக வந்தது. சுவை சூப்பர். எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 நாள் +60-75 நிமிடங்கள்
4-6 நபர்கள்
  1. ஊற வைப்பதற்கு :
  2. 3/4கப்உலர்ந்த கருப்பு திராட்சை
  3. 1/4 கப் கிஸ்மிஸ்
  4. 1/4 கப் கட் செய்த பேரிட்சை
  5. 1/2 கப் டுட்டி ஃப்ரூட்டி
  6. 2டேபிள் ஸ்பூன் செர்ரி கட் செய்தது
  7. 1/4 கப் உடைத்த முந்திரி
  8. 1/4 கப் உடைத்த பாதாம்
  9. 3 டேபிள் ஸ்பூன் உடைத்த பிஸ்தா
  10. 1/2 கப் ஆரஞ்சு ஜூஸ்
  11. 2டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் துருவியது
  12. மசாலா தூள் செய்ய:
  13. 1சிறு துண்டு பட்டை
  14. 1 ஏலக்காய்
  15. 2 இலவங்கம்
  16. 2பின்ச் ஜாதிக் காய்
  17. கேக் செய்யத் தேவையான பொருட்கள் :
  18. 100கிராம் வெண்ணெய்
  19. 1/4கப் சர்க்கரை பொடி செய்தது
  20. 1/4 கப்+2 டேபிள் ஸ்பூன் ப்ரௌன் சுகர்
  21. 2 முட்டை
  22. 1டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  23. 1/4கப் கேரமல் சிரப்
  24. 1பின்ச் உப்பு
  25. 1/2 டீஸ்பூன் பேக்கிங் பௌடர்
  26. 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  27. 1+1/2 கப் மைதா
  28. டஸ்ட் செய்ய
  29. 1/4கப் மைதா

சமையல் குறிப்புகள்

1 நாள் +60-75 நிமிடங்கள்
  1. 1

    ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை ஆரஞ்சு ஜூஸில் 1 நாள் முழுதும் ஊற வைக்கவும்.

  2. 2

    அடுத்த நாள் பொடி செய்ய வேண்டிய பொருட்களை பொடித்து வைக்கவும்.

  3. 3

    மைதா, பேக்கிங் பௌடர், பேக்கிங் சோடா, பொடித்த மசாலா தூள் சேர்த்து 2 முறை சலித்து வைக்கவும்.

  4. 4

    குக்கர் அல்லது நான் ஸ்டிக் பேனில் சிறிது மணலைக் கொட்டி அதில் ஒரு ஸ்டாண்டை வைத்து மூடி சூடுசெய்யவும்.

  5. 5

    டிரை ஃப்ரூட்ஸை வடிகட்டி ஆரஞ்சு ஜுஸை தனியாக எடுத்து வைக்கவும். வடிகட்டிய பழங்களை ஒரு தட்டில் கொட்டி 1/4 கப் மைதாவைக் கலந்து வைக்கவும்.

  6. 6

    ஒரு குழிவான பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு நன்கு பீட் செய்யவும். க்ரீம்போல் ஆனதும் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்யவும்.

  7. 7

    இதனுடன் ஒரு முட்டை சேர்த்து நன்கு பீட் செய்யவும். பின்னர் மேலும் ஒரு முட்டையை சேர்த்து நன்கு பீட் செய்யவும். இதில் வெனிலா எசன்ஸ் சேர்த்து, மீதமான ஆரஞ்சு ஜுஸை சேர்த்து நன்கு கலக்கவும்.

  8. 8

    இதனுடன் கேரமல் சிரபை சேர்த்து நன்கு பீட் செய்யவும். இதில் மசாலா தூள் சேர்த்த மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து மெதுவாக கலக்கவும். எல்லா மைதாவையும் சேர்த்து நன்கு கலந்து கட்டிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

  9. 9

    இதில் பழக்கலவையை சேர்த்து நன்கு கலந்து, பட்டர் பேப்பர் போட்டு தயாராக உள்ள கேக் பேனில் போட்டு சமன் படுத்தி இரண்டுமுறை பேனைத் தட்டி சூடாக உள்ள நான் ஸ்டிக் பேனில் வைத்து மூடி குறைந்தது1மணி நேரம் சிம்மில் வைத்து வேக வைக்கவும். ஒரு டூத்பிக்கை கேக்கில் குத்திப் பார்த்து வெந்ததும், அடுப்பை அணைத்து விடவும். 5 நிமிடம் கழித்து வெளியே எடுத்து ஆறின பின் கட் செய்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes