ஆட்டுகால் சூப் (Aatu kaal soup recipe in soup in Tamil)

ஆட்டுகால் சூப் (Aatu kaal soup recipe in soup in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தனியா, மிளகு, சீரகம் மூன்றையும் தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பொடித்து வைக்கவும்.
- 2
காய்ந்த மிளகாய், வெங்காயம் ஒன்று, இஞ்சி, பூண்டு, தக்காளி ஒன்று, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை ஒன்றாக அரைத்து வைக்கவும்.
- 3
முதலில் ஆட்டுக்காலை தீயில் போட்டு சுட்டெடுக்கவும். கடையிலே அப்படி செய்தும் விற்பார்கள். அப்படி செய்வதால் அதிலுள்ள ரோமம் எல்லாம் உதிர்ந்துவிடும். நன்கு சுத்தம் செய்து போதிய அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 10-15 விசில் வரும் வரை வேக விடவும்.
- 4
எண்ணெய்யை காய வைத்து மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிதளவு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். அதிகம் குழைய தேவையில்லை. அதனால் சிறிதளவு வெந்ததும் வேகவைத்துள்ள ஆட்டுக்கால் மற்றும் தண்ணீரை இதனுடன் சேர்க்கவும்.
- 5
உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும். இப்பொழுது அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் கலவையை சேர்த்து தீயை குறைத்து வைக்கவும்.
- 6
பதினைந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். கொத்தமல்லி தூவினால் சுவையான ஆட்டுக்கால் சூப் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)
#Immunityஎங்கள் வீட்டில் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்கிய முதல் இந்த ஆட்டுக்கால் சூப்பை குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது பச்சை மிளகாயை தவிர்க்கவும். இந்த சூப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆகையால் இதனை செய்து அனைவரும் நலம் பெற நான் இந்த செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
-
-
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
முடவாட்டுக் கிழங்கு சூப் அல்லது ஆட்டுக்கால் கிழங்கு சூப் (Muda vaattikizhanku soup)
#refresh2முடவாட்டுக்கிழங்கு மலைகளில் உள்ள பாறை இடுக்குகளில் இருந்து கிடைக்கிறது. சதுரகிரி,ஏற்காடு,கொல்லி மலை போன்ற இடங்களில் கிடைக்கும். எலும்புகளுக்கு மிகவும் நல்லது.மூட்டு வலியை தீர்க்கும் சக்தி வாய்ந்தது. இந்த கிழங்கு ஆட்டுக்கால் போன்ற வடிவில் உள்ளதால் இதை ஆட்டுக்கால் கிழங்கு என்றும் சொல்வது வழக்கம். Renukabala -
-
-
-
-
-
-
-
-
வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil)
பச்சை கொள்ளை வைத்து ரசம் செய்தால் சூப்பு மாதிரியும் சாப்பிடலாம் சாதத்திற்கும் சாப்பிடலாம் இது உடல் எடை குறைப்பிற்கு உதவும். Rithu Home -
-
-
-
முருங்கைக் காய் சூப் (Drumstick soup recipe in tamil)
முருங்கைக் காய் சூப் மிகவும் சுவையாக இருந்தது.சத்துக்கள் நிறைந்த இந்த முருங்கைக் காய் சூப் செய்வது மிகவும் எளிது.#refresh2 Renukabala -
மூலிகை சூப் (Mooligai soup recipe in tamil)
#GA4மழைக் காலங்களிலும் குளிர் காலங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் சளி இருமல் போன்றவற்றை தடுப்பதற்காக நமது வீட்டில் உள்ள மூலிகை பொருட்கள் மற்றும் சீரகம் மிளகு வைத்து சுலபமாக செய்யக்கூடிய மூலிகை சூப். ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் இதை 15 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கும்போது அதிலிருந்து விடுபட உதவிகரமாக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
கொள்ளு பருப்பு சூப்(horse gram soup)🥗👌👌
#refresh2பல நன்மைகளை கொண்ட அருமையான கொள்ளுப் பருப்பு சூப் செய்ய முதலில் கொள்ளுப் பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி,அதனுடன் கறிவேப்பிலை, சீரகம்,சிறிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு தேவைக்கேற்ப சேர்த்து மூடி போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.பின் சூுப்பை மட்டும் வடிகட்டி மூலம் தனியாக வடித்து எடுத்துக் கொள்ளவும்.சளி தொல்லை சரியாக மிகவும் அருமையான கொள்ளு சூப் தயார்👌👌 Bhanu Vasu -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்