நெல்லை புளியில்லாக் கறி

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

நெல்லை புளியில்லாக் கறி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் - ஆய்ந்து சுத்தம் செய்த முருங்கைக் கீரை
  2. 1/2 கப் - பாசிப்பருப்பு
  3. வறுத்து அரைக்க
  4. 1 தேக்கரண்டி - மிளகு
  5. 1/2 தேக்கரண்டி- சீரகம்
  6. 2 - மிளகாய் வத்தல்
  7. 2 மேசைக்கரண்டி - தேங்காய் துருவல்
  8. தாளிக்க
  9. 1 தேக்கரண்டி - எண்ணெய்
  10. 1 தேக்கரண்டி - கடுகு உளுந்தம் பருப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து கழுவி வேக வைக்கவும்.

  2. 2

    முருங்கைக் கீரையை கழுவி தனியே வேகவைக்கவும்.

  3. 3

    வெறும் கடாயில் மிளகாய் வத்தல், மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.

  4. 4

    தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    பாசிப்பருப்பு முக்கால் வேக்காடு வெந்ததும் வேக வைத்த முருங்கைக் கீரையை சேர்க்கவும்.

  6. 6

    தேவையான அளவு உப்பு, அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கவும்.

  7. 7

    கடுகு உளுந்தம் பருப்பு தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

  8. 8

    உடல் நிலை சரியில்லாத நேரத்தில், சளி இருமல் அதிகமாக இருக்கும் போது சூடான சாதத்துடன் இந்தக் குழம்பு சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes