தக்காளி ரவா தோசை (Thakkaali rava dosai recipe in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

தக்காளி ரவா தோசை (Thakkaali rava dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3தக்காளி
  2. 1 கப் ரவை
  3. 1 கப் அரிசி மாவு
  4. 1/2 கப் மைதா அல்லது கோதுமை மாவு
  5. 1 தேக்கரண்டி மிளகு
  6. 1/2 தேக்கரண்டி சீரகம்
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளியை நறுக்கி நன்கு மைய அரைக்கவும். ரவையுடன் கலந்து ஊற வைக்கவும்.

  2. 2

    அரிசி மாவு, மைதா அல்லது கோதுமை மாவு சேர்த்து கரைத்து வைக்கவும்.

  3. 3

    அரை மணி நேரம் கழித்து ஒரு பெரிய பவுலில் ஊறவைத்த ரவை, கரைத்த மாவுக் கலவை நறுக்கிய பச்சைமிளகாய், மிளகு, சீரகம் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

  4. 4

    மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

  5. 5

    வழக்கமான தோசையைப் போல் நடுவிலிருந்து ஊற்றக்கூடாது.

  6. 6

    தோசைக்கல்லில் ஓரத்திலிருந்து மாவை ஊற்றிக் கொண்டு நடுவில் முடிக்கவும்.

  7. 7

    மாவை ஒரு சிறு கிண்ணத்தில் எடுத்து ஊற்றலாம்.

  8. 8

    சிறிது எண்ணெய் ஊற்றி தோசை நன்கு வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

  9. 9

    வித்தியாசமான சுவையுடன் தக்காளி ரவா தோசை புதினா சட்னியுடன் பரிமாறி மகிழவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes