தக்காளி சட்னி / Boiled Tomato Chutney
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் அரை டேபிள்ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். நிறம் மாறிய பின்பு அதை மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
- 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அதில் 3 தக்காளியை போடவும். இப்பொழுது தக்காளி நன்றாக கொதித்த உடன் அவன் திருப்பி போட வேண்டும்.அதன் தோல் நீங்கும் போது அடுப்பை அணைக்கவேண்டும்.
- 3
அதன் சூடு தணிந்த பின்பு அதை மிக்ஸி ஜாரில் மாற்றி அதனோடு சிறிய துண்டு புளி சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
- 4
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு தாளிக்க வேண்டும். இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் தக்காளியை அதனோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அதனோடு ஒரு டேபிள்ஸ்பூன் வத்தல் தூள் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.
- 5
இப்பொழுது தக்காளி நன்றாக கொதிக்க ஆரம்பித்த பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதனோடு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். இப்பொழுது 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 6
சுவையான தக்காளி சட்னி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி வறுத்த தேங்காய் சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4இந்த தக்காளி சட்னி.. வெங்காயம் பூண்டு சேர்த்து செய்யாமல் வித்தியாசமான சுவையில் செய்த அருமையான சட்னி அல்லது துவயல்.... Nalini Shankar -
-
-
-
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
More Recipes
கமெண்ட்