தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. மைதா-2 கப்
  2. நெய்-1/4 கப்
  3. சர்க்கரை-1 டீஸ்பூன்
  4. சீரகம்-1 டீஸ்பூன்
  5. உருளைக்கிழங்கு-2
  6. இஞ்சி-1 டீஸ்பூன்(பொடியாக நறுக்கியது)
  7. பச்சை மிளகாய்-2
  8. கரம் மசாலா-1/4 டீஸ்பூன்
  9. சில்லி பிளேக்ஸ்-1 டீஸ்பூன்
  10. சாட் மசாலா-1 டீஸ்பூன்
  11. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  12. காய்ந்த மாங்காய் பொடி-1/2 டீஸ்பூன்
  13. உப்பு-தேவைக்கேற்ப
  14. எண்ணெய்-தேவைக்கேற்ப
  15. மல்லி தழை-1/4 கப்(பொடியாக நறுக்கியது)

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பௌலில் மைதா,நெய்,உப்பு,சர்க்கரை, சீரகம் மற்றும் வெதுவெதுப்பான நீர் ஊற்றி மென்மையாக பிசைந்து,அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து கிளறி,மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின் அதில் சில்லி பிளேக்ஸ்,கரம் மசாலா, சாட் மசாலா, மஞ்சள் தூள், காய்ந்த மாங்காய் பொடி சேர்த்து 2 நிமிடம் கிளறி,கடைசியில் மல்லி தழை தூவி இறக்கவும்.

  5. 5

    ஊற வைத்த மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து,பூரி போல் வட்டமாக தேய்த்து,இரண்டாக வெட்டி எடுத்து கொள்ளவும்.

  6. 6

    மாவின் இரண்டு முனையிலும் தண்ணீர் தடவி(பிரஷ் செய்து) ஒன்றாக சேர்த்து ஒட்டவும்.

  7. 7

    பின் அதில் வதக்கிய உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடவும்.

  8. 8

    இதை போல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.

  9. 9

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  10. 10

    சுவையான பஞ்சாபி சமோசா ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes