பானி பூரி (Paani poori recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

பானி பூரி (Paani poori recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் ரவை
  2. 2 ஸ்பூன் மைதா
  3. உப்பு சிறிதளவு
  4. 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  5. 100கிராம் கொண்டைக்கடலை
  6. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  7. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  9. 1/4ஸ்பூன் சாட் மசாலா
  10. 1கப் புதினா
  11. 1கப் மல்லி இலை
  12. 1ஸ்பூன் சீரகம்
  13. 1துண்டு இஞ்சி
  14. 1பச்சை மிளகாய்
  15. 1/2மாங்காய்
  16. 1ஸ்பூன் இந்துப்பு
  17. 1/2எலுமிச்சை
  18. பெரிய எலுமிச்சை அளவு புளி
  19. 5பேரிச்சம்பழம்
  20. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  21. 3ஸ்பூன் கரும்பு சர்க்கரை
  22. சிறிதளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ரவை, மைதா, உப்பு சேர்த்து வெந்நீர் ஊற்றி நன்கு பிசைந்து, ஒரு மணி நேரம் வைத்து பிறகு உருட்டி கட்டரில் கட் செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்வோம்.

  2. 2

    வேகவைத்து மசித்த உருளைக் கிழங்குடன்,வேகவைத்த கொண்டைக்கடலை, மிளகாய்த்தூள், கரம் மசாலா,உப்பு,சாட் மசாலா,மல்லி இலை தூவி தயார் செய்து கொள்வோம்.

  3. 3

    பச்சை சட்னி செய்வதற்கு :ஒரு மிக்ஸி ஜாரில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம்,தோல் சீவிய மாங்காய் அனைத்தையும் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி அதில் எலுமிச்சம்பழ சாறு மற்றும் உப்பு சேர்த்து வைத்துக்கொள்வோம்.

  4. 4

    புளி சட்னி செய்ய : புளியைக் கரைத்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும் அதில் அரைத்து வைத்த பேரிச்சம்பழ விழுது, கரும்பு சர்க்கரை, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதித்த பிறகு ஆற வைத்துக் கொள்வோம்.

  5. 5

    பூரியை எடுத்து நடுவில் தட்டி ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கை வைத்து வெங்காயம் கேரட் புளி சட்னி சேர்த்து பச்சை சட்னியில் முக்கி எடுத்து சாப்பிட்டால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம். 🥭🥔🌶🥗🤤🤤😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes