பாணி பூரி

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. பூரி செய்வதற்கு:
  2. 1/4 கப் மைதா
  3. 1 கப் ரவை
  4. 1/4டீஸ்பூன் உப்பு
  5. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  6. 1 சிட்டிகை பேக்கிங் சோடா
  7. புதினா சட்னி செய்வதற்கு:
  8. 1/4 கப் புதினா இலை
  9. 1/2 கப் மல்லி தழை
  10. 2 பச்சை மிளகாய்
  11. 1/2 துண்டு இஞ்சி
  12. உருளைக்கிழங்கு செய்வதற்கு:
  13. 2 உருளைக்கிழங்கு
  14. 1/4 கப் கொண்டை கடலை
  15. 1டீஸ்பூன் சாட் மசாலா
  16. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  17. 1/4 கப் மல்லி தழை
  18. உப்பு தேவைக்கேற்ப
  19. புளி சட்னி செய்வதற்கு:
  20. 2 எலுமிச்சை அளவு புளி
  21. 1/4 கப் வெள்ளம்
  22. 2டீஸ்பூன் சாட் மசாலா
  23. 2டீஸ்பூன் சர்க்கரை
  24. 1டீஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பௌலில் மைதா,ரவை,பேக்கிங் சோடா, உப்பு எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    ஒரு மிக்ஸி ஜாரில் புதினா,மல்லி தழை, பச்சை மிளகாய்,இஞ்சி மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து,வடித்து கொள்ளவும்.பின் அதில் சாட் மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும்.

  4. 4

    உருளைக்கிழங்கு கொண்டை கடலையை வேக வைத்து மசித்து கொள்ளவும்.பின் மிளகாய் தூள், உப்பு மற்றும் சாட் மசாலா சேர்த்து கிளறி கொள்ளவும்.

  5. 5

    புளியை தண்ணீர் மற்றும் வெள்ளம் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறிய பிறகு அரைத்து வடித்து கொள்ளவும்.

  6. 6

    பின் அதில் சர்க்கரை, உப்பு மற்றும் சாட் மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும்.

  7. 7

    பிசைந்து மாவை பெரிய வட்டமாக திரட்டி, சிறிய வட்டமாக வெட்டி கொள்ளவும்.

  8. 8

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூரியை பொரித்து எடுக்கவும்.

  9. 9

    பூரியின் நடுவே ஓட்டை போட்டு,உருளைக்கிழங்கு கலவை,புளி சட்னி,ஓமப்பொடி சேர்த்து கடைசியில் பாணி ஊற்றி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes