ஜவ்வரிசி சேமியா கீர்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

# book
# குளிர்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1லிட்டர் பால்
  2. 1கப் ஜவ்வரிசி
  3. 1/2கப் சேமியா
  4. 1டின் மில்க்மெயின்ட்
  5. 1/2கப் சர்க்கரை
  6. 3_ 1/2 கப் தண்ணீர்
  7. 6டேபிள்ஸ்பூன் நெய்
  8. 10முந்திரி
  9. 10கருப்பு திராட்சை
  10. 10திராட்சை
  11. 2டேபிள்ஸ்பூன் சாரப்பருப்பு
  12. 10பிஸ்தா
  13. 1/4ஸ்பூன் ரோஸ் வாட்டர்
  14. 10ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் தண்ணீர் ஐ கொதிக்க விடவும்

  2. 2

    1 ஸ்பூன் நெய் விட்டு ஜவ்வரிசி ஐ இரண்டு நிமிடம் வறுத்து எடுக்கவும்

  3. 3

    பின் கொதிக்கும் நீரில் போட்டு வேகவிடவும்

  4. 4

    ஐந்து நிமிடம் வெந்ததும் இடித்த ஏலக்காய் சேர்த்து கிளறி மீண்டும் 10 நிமிடங்கள் வரை வேகவைத்து இறக்கவும்

  5. 5

    பாலை தனியாக அடுப்பில் வைத்து (இருபது நிமிடங்கள் வரை) சற்று சுண்டும் வரை கொதிக்க விடவும்

  6. 6

    வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை பிஸ்தா சாரப்பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுக்கவும்

  7. 7

    பின் மீண்டும் மீதமுள்ள நெய் விட்டு சூடானதும் சேமியாவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்

  8. 8

    பின் வேகவைத்த ஜவ்வரிசி உடன் சுண்ட வைத்துள்ள பாலை ஊற்றி வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும்

  9. 9

    சேமியா வெந்ததும் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கவும்

  10. 10

    பின் வறுத்து வைத்துள்ள நட்ஸ் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கிளறவும்

  11. 11

    சுவையான ஜவ்வரிசி சேமியா கீர் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes