கோபி மஞ்சூரியன்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#மகளிர
எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1காலிஃப்ளவர்- நறுக்கி சுத்தம் செய்தது
  2. 2 மேசைக்கரண்டி - மைதா
  3. 2 மேசைக்கரண்டி - அரிசி மாவு
  4. 2 மேசைக்கரண்டி - கார்ன் ஃப்ளார்
  5. 1 தேக்கரண்டி - மிளகாய் பொடி
  6. 1/2 தேக்கரண்டி - மிளகுப் பொடி
  7. தேவையானஅளவு உப்பு
  8. தேவையானஅளவு - எண்ணெய்
  9. 1/2 - குடைமிளகாய்
  10. 1 - வெங்காயம்(தேவைப்பட்டால்)
  11. 1 தேக்கரண்டி - இஞ்சி பூண்டு விழுது
  12. 1 தேக்கரண்டி - தக்காளி சாஸ்
  13. 1 தேக்கரண்டி - சில்லி சாஸ்
  14. 1 தேக்கரண்டி - சோயா சாஸ்
  15. 1/2 தேக்கரண்டி - மிளகுப் பொடி
  16. 2 தேக்கரண்டி - கார்ன் ஃப்ளார்
  17. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    காலிஃப்ளவர் நறுக்கி மஞ்சள் பொடி, உப்பு சேர்த்த தண்ணீரில் பத்து நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.

  2. 2

    காலிஃப்ளவர் தண்ணீர் வடித்து வைக்கவும். ஒரு பவுலில் கார்ன் ஃப்ளார், மைதா, அரிசி மாவு, மிளகாய் பொடி, மிளகு பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். காலிஃப்ளவர் துண்டுகளை மாவுக்கலவையில் சேர்த்து கலந்து ஃப்ரீசரில் வைக்கவும்.

  3. 3

    அரை மணி நேரம் கழித்து எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  4. 4

    கடாயில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, சில்லி சாஸ், சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகு பொடி, மிளகாய் பொடி சேர்த்து வதக்கி கார்ன் ஃப்ளார் கரைத்து ஊற்றவும். நன்கு கலந்து பொரித்து எடுத்த காலிஃப்ளவர் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

  5. 5

    பிரியாணி மற்றும் புலாவோடு பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes