எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சுருள் வடிவ பாஸ்தா-2கப்
  2. கேரட், பீன்ஸ்,பச்சைப் பட்டாணி உருளைக்கிழங்கு (அனைத்தும் சேர்த்து)-1கப்
  3. இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
  4. தக்காளி -1
  5. கடுகு(தேவைப்பட்டால்)-1/4 டீஸ்பூன்
  6. பெரிய வெங்காயம்- 1
  7. பச்சை மிளகாய்-2
  8. கரம் மசாலா- ஒரு டீஸ்பூன்
  9. மஞ்சள்தூள்-1/4 டீஸ்பூன்
  10. கொத்தமல்லி இலை சிறிது
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பாஸ்தாவை சிறிது எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து வடித்துக் கொள்ளவும். வடித்த பின் குளிர்ந்த நீரில் அலசிக் கொள்ளவும்.

  2. 2

    முதலில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.அதன்பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.அதில் மஞ்சள்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.பின் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மிதமான சூட்டில் மூடி வைத்து வேக வைக்கவும்.பின் வேகவைத்த பாஸ்தா சேர்த்து நன்றாக கலந்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

  3. 3

    இதனை தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sanas Lifestyle (SaranyaElamparuthi)
அன்று
Dharmapuri

Similar Recipes