செட்டிநாடு பேபி உருளைக்கிழங்கு வறுவல்

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 500கிராம் பேபி உருளைக்கிழங்கு
  2. 10மிளகாய் வற்றல்
  3. 2ஸ்பூன் தனியா
  4. 1 1/2ஸ்பூன் மிளகு
  5. 1ஸ்பூன் கடலை பருப்பு
  6. 1ஸ்பூன் உளுந்து பருப்பு
  7. 1ஸ்பூன் சோம்பு
  8. 1ஸ்பூன் கடுகு
  9. 3ஸ்பூன் எண்ணெய்
  10. உப்பு தேவையான அளவு
  11. 1கொத்து கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் தனியா, வற்றல், கடலை பருப்பு, உளுந்து, மிளகு சேர்த்து வறுத்து கொள்ளவும்

  3. 3

    பாதி வறுபட்டதும் சோம்பு சேர்த்து வறுத்து கொள்ளவும்...

  4. 4

    வறுத்த கலவையை ஆற விடவும்... ஆறியதும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்

  5. 5

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து அதில் உருளைக்கிழங்கை போட்டு சிறிது நேரம் வதக்கவும்

  6. 6

    லேசாக நிறம் மாறியதும் அரைத்த பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்

  7. 7

    சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்

  8. 8

    இப்போது சுவையான பேபி உருளைக்கிழங்கு வறுவல் தயார்..

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes

More Recommended Recipes