நெத்திலி மீன் குழம்பு

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பேருக்கு பரிமாறலாம்
  1. புளி நெல்லிக்காய் அளவு
  2. வணக்கி அரைக்க:
  3. நல்லெண்ணெய் வணக்க தேவையான அளவு
  4. சின்ன வெங்காயம் 200 கிராம்
  5. தக்காளி-2
  6. நெத்திலி மீன் அரை கிலோ
  7. பூண்டு 4 பல்
  8. வரமிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  9. கொத்தமல்லித் தூள் ஒன்றரை டேபிள்ஸ்பூன்
  10. தேங்காய் பால் கால் கப்
  11. தாளிக்க:
  12. நல்லெண்ணெய் 4 டேபிள் ஸ்பூன்
  13. கடுகு கால் டேபிள்ஸ்பூன்
  14. வெந்தயம் கால் டேபிள்ஸ்பூன்
  15. பெருங்காயத்தூள் 2 பின்ச் அளவு
  16. கருவேப்பிள்ளை 2 கொத்து
  17. சின்ன வெங்காயம் பத்து நம்பர்
  18. பூண்டு 5 பற்கள்
  19. பொடி செய்ய:
  20. கடலை பருப்பு உளுத்தம்பருப்பு தலா அரை ஸ்பூன்
  21. வெந்தயம் கால் டேபிள்ஸ்பூன்
  22. பெருங்காயம் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதில் சிறிது கல் உப்பு மஞ்சள் போட்டு பிரட்டி வைக்கவும் இரண்டு நிமிடம் வைத்தால் போதும் சிறிது நேரமே போதும்

  2. 2

    ஒரு கடாயில் நல்லெண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்து அதில் சின்ன வெங்காயம் தக்காளி வரமிளகாய் கொத்தமல்லி தூள் இவைகளை சேர்த்து வணக்கி அரைத்துக் கொள்ளவும்.தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி,கடுகு, வெந்தயம் கருவேப்பிலை,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய பூண்டுகளை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் பச்சை வாசனை நீங்கிய பிறகு அரைத்த வெங்காயம் தக்காளி விழுதை சேர்க்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து உப்பு சேர்த்து இதனுடன் கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்து கொதிக்க விடவும்.

  5. 5

    குழம்பு பச்சை வாசனை நீங்கி கொதி வந்தவுடன் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விடவும். வறுத்து அரைத்த ஒரு ஸ்பூன் பொடியை சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி விடவும்.பிறகு சுத்தம் செய்து கழுவி வைத்துள்ள நெத்திலி மீன்களை இதில் சேர்த்து மூன்று நிமிடம் வேகவிடவும் மீன் வெந்த பிறகு அடுப்பை அணைத்து கொத்துமல்லி தூவி பரிமாறவும்.

  6. 6

    இப்பொழுது சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்😋😋😋🐟.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes