ஆரோக்கியமான கெட்டி உருண்டை/பொரிவிளங்கா உருண்டை

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#ஸ்னாக்ஸ் #book குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை சாப்பிடுவதால் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமானது.

கெட்டி உருண்டையில் மிகவும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு குண்டு வெல்லம்
  2. 100 கிராம் கொள்ளு
  3. 100 கிராம் நரிப்பயிறு
  4. 100 கிராம் பாசிப்பருப்பு
  5. 100 கிராம் பச்சரிசி
  6. 100 கிராம் வேர்க்கடலை
  7. 100 கிராம் எள்ளு
  8. 100 கிராம் பொட்டுக்கடலை
  9. 400 கிராம் பொடித்த பொட்டுக்கடலை மாவு
  10. 5 ஏலக்காய் தூள்
  11. 1/2 கப் பொடியாக நறுக்கிய கொப்பரை தேங்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கொள்ளு,நரிப்பயறு,பச்சரிசி &பாசிப்பருப்பு இவை நான்கையும் தனித்தனியாக நன்கு சிவக்க வறுத்து பொடித்து சலித்துக்கொள்ளவும்.

  2. 2

    வேர்க்கடலையை வறுத்து ஒன்றும் பாதியுமாக பொடித்துக் கொள்ளவும். எள்ளை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    முதலில் சலித்து வைத்த பொடியுடன்,வறுத்து பொடித்த வேர்க்கடலை,400 கிராம் பொட்டுக்கடலை மாவு, வறுத்த எள்ளு, 100 கிராம் பொட்டுக்கடலை, பொடியாக நறுக்கிய கொப்பரை தேங்காய், ஏலக்காய்த்தூள் என இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

  4. 4

    வெல்லத்தை பொடித்து அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் பாகு தயார் செய்யவும்.

  5. 5

    பாகு ரெடியானதும்,கலந்து வைத்த மாவில் சிறிது சிறிதாக வெல்லப்பாகு சேர்த்து கெட்டி உருண்டை பிடிக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes