புரோட்டின் பார்பில் பியூட்டி

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

பிளாக் ரைஸ் ஸ்மூதி ஷேக். மிகவும் சுலபமானது மற்றும் ஹெல்தியான இந்த சேர்க்கை செய்வது எப்படி என்று வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3

புரோட்டின் பார்பில் பியூட்டி

பிளாக் ரைஸ் ஸ்மூதி ஷேக். மிகவும் சுலபமானது மற்றும் ஹெல்தியான இந்த சேர்க்கை செய்வது எப்படி என்று வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 150கிராம் பிளாக் ரைஸ்
  2. 300 மில்லி பால்
  3. 100 கிராம் வெல்லம்
  4. 400 மில்லி தண்ணீர்
  5. ஏலக்காய்-2
  6. டிரைஃப்ரூட்ஸ் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கருப்பு அரிசி சுத்தம் செய்து ஒரு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு ஒரு மணி நேரம் ஊறிய பிறகு இப்போது இதை வேக வைக்கிற ப்ராசஸ் ஐ ஆரம்பிக்கலாம்.

  2. 2

    அதற்கு அடுப்பில் அரிசியை விட இரண்டு மடங்கு தண்ணீர் வைக்கவேண்டும் தண்ணீர் கொதித்தவுடன் ஊற வைத்த அரிசியை போட்டு ஒரு இருபது நிமிடம் அல்லது 30 நிமிடத்திற்குள் நன்றாக வெந்துவிடும்.

  3. 3

    இப்பொழுது ஒரு மீடியம் சைஸ் மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளவும் அதில் வேக வைத்த பிளாக் அரிசியை அதில் சேர்க்க வேண்டும். அதன்மேல் 300ml பால் சேர்க்கவும்.

  4. 4

    இரண்டு ஏலக்காய் மற்றும் 100 கிராம் பொடித்த வெள்ளத்தையும் அதில் சேர்க்கவும் இப்பொழுது மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து எடுத்துக் கொள்ளவும். உங்களுக்குப் பிடித்த டிரைஃப்ரூட்ஸ் ஐ மேலே தூவி ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து பிறகு பரிமாறுங்க

  5. 5

    மிகவும் சுவையான மற்றும் ஹெல்தியான புரோட்டின் பார்பில் பியூட்டி ஸ்மூதி ஷேக் பெயராகிவிட்டது ஒருமுறை செய்து பாருங்கள் நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Akzara's healthy kitchen
அன்று

Similar Recipes