எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. பீட்ரூட்-2
  2. உருளைக்கிழங்கு-1
  3. மைதா மாவு-3 டீஸ்பூன்
  4. கார்ன் பிளவர் மாவு-3 டீஸ்பூன்
  5. மிளகு தூள்-1 டீஸ்பூன்
  6. கரம் மசாலா தூள்-1/2 டீஸ்பூன்
  7. சீரகத்தூள்- 1/2 டீஸ்பூன்
  8. எண்ணெய்-4-5 டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. கொத்தமல்லி இலை- சிறிது
  11. பெரிய வெங்காயம்-1
  12. பிரட் தூள்- தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. உருளைக்கிழங்கை வேக வைத்து, நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும்.. பீட்ரூட்டை தோல் சீவி துருவி வைக்கவும்... ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பீட்ரூட், மைதா மாவு, கார்ன் பிளவர் மாவு 1 டீஸ்பூன், மிளகு தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    பிசைந்து வைத்துள்ள கலவையை தேவையான அளவு உருண்டைகளாக உருட்டி, கட்லட் போன்ற வடிவில் பரத்தி வைக்கவும்... ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கட்லெட்களை கார்ன் பிளவர் மாவு கரைசலில் நனைத்து பிரட் தூளில் உருட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு நன்றாக இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் (shallow fry). சூடான சுவையான ஆரோக்கியமான பீட்ரூட் கட்லட் ரெடி... தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்... நன்றி.. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes