சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காபி கொட்டையை அடிகனமான கடாயில் சூடு ஏறியதும் போட்டு வறுக்கவும் புகை வரஆரம்பிக்கும் பொழுது சிம்மில் போடவும் பிறகு தீயை ஏற்றி திரும்பவும் புகை வரும் பொழுது சிம்மில் போட்டு இப்படிபடியாக மாற்றி மாற்றி கருப்பு நிறம் வரும் வரை வறுக்கவும். காபி கொட்டை வருப்பது மிகவும் பதமாக இருக்க வேண்டும். இறக்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் சீனி போட்டு நன்கு கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.
- 2
இப்பொழுது காபி கொட்டை நன்கு ஆறியதும் கட்டி கட்டியாக இருக்கும் சீனி கரமலை ஆனதால் கட்டியாகி விடும் இவற்றை உதிர்த்து மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக இல்லாமல் நைஸ் ஆகவும் இல்லாமல் நாம் கடையில் வாங்கும் காபித்தூள் பதம் வரும் வரை அரைக்கவும் அத்துடன் சிக்கரி சேர்த்து ஒரு முறை கலக்கும் வரை அரைத்து எடுத்து கொள்ளவும்
- 3
இப்பொழுது ஒரு டம்ளர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்கவும். காபி பில்டர் ஈரமில்லாமல் இருக்க வேண்டும் காபி பில்டர் இன் மேல் அடுக்கில் ஒரு வலை கம்பியை வைத்து அதன் மீது ஒரு ஸ்பூன் சீனியை போட்டு அதில் முக்கால் பாகம் வரை காபி பொடியை போட்டு விட்டு பிறகு நன்கு கையால் அழுத்தி விடவும்.
- 4
இப்பொழுது தண்ணீர் நன்றாக கொதித்ததும் அந்த தண்ணீரை சிறிது சிறிதாக காபி பொடியின் மேல் ஊற்றவும் அனைத்து காபி பொடியும் நனைந்ததும் மூடி வைத்து விடவும் அந்த காபி பொடி நன்கு ஒரு மணி நேரம் ஊற வேண்டும்.
- 5
இப்பொழுது மேலும் ஒரு கிளாஸ் சுடுநீரை கொதிக்கவைத்து சிறிதுசிறிதாக காபிப் பொடியின் மேல் விடவும் இப்பொழுது திக்கான டிக்காஷன் இறங்க ஆரம்பிக்கும். பாலை காய்ச்சி பொங்கியதும் ஐந்து நிமிடம் சிம்மில் போட்டு பிறகு வடிகட்டி எடுத்து தேவையான அளவு சீனி சேர்த்து டிக்காஷன் ஒரு ஸ்பூன் விட்டு சேர்த்துக் கலக்கவும் இப்பொழுது கும்பகோணம் டிகிரி காபி ரெடி.ஒரு டம்ளர் பால் ஒரு ஸ்பூன்டிக்கெட்டின் சேர்த்தால் நன்றாக நிறம் கிடைக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் காபி சுவையும் மணமும் சூப்பராக இருக்கும்.
- 6
இந்த காபியை இப்பொழுது சூடாக நுரை பொங்க ஆற்றி பித்தளை டபரா செட்டில் பரிமாறவும். சுவையான சூப்பரான கும்பகோணம் டிகிரி காபி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காபிதூள் மற்றும் பில்டர் காபி (Coffee thool matrum filter coffee recipe in tamil)
பாரம்பரிய மிக்க பில்டர் காபி Priyaramesh Kitchen -
-
ஐஸ் காபி
காபி அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒன்று. என்றாலும் எவ்வளவு நாள் கொதிக்கும் காபியை பருக முடியும். கொஞ்சம் வித்தியாசமாக செய்து பார்க்கலாமே... சுட சுட கொதிக்கும் காபியை விட்டு தள்ளி குளு குளு வென ஐஸ் காபி பருகலாம். வாங்க! எப்படி செய்வது என பார்க்கலாம்! #GA4 #week8 Meena Saravanan -
-
கும்பகோணம் பில்டர் காபி
#vattaram #week11 #AsahiKaseiIndiaபில்டர் காபி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மிகவும் பிரபலமானதாகும். இதற்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. பாரம்பரியமாக இதை பித்தளை பில்டர் மற்றும் டபரா பயன்படுத்தி செய்வார்கள். Asma Parveen -
-
-
-
கோல்டு(cold) காபி
வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இதோ வீட்டீல் உள்ள பொருளை வைத்து சுவையான காபி தயாரிக்கலாம்.1.) கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்பு மற்றும் பற்களுக்கு நல்லது.2.) உடலிற்கு குளிர்ச்சி தரும்.#lock down லதா செந்தில் -
-
-
பத்து நிமிட பால் கொழுக்கட்டை
#fitwithcookpad#goldenapron3#book. பால் கொழுக்கட்டை அனைத்து பொருள்களும் ரெடியாக இருந்தால் பத்து நிமிடத்தில் செய்யலாம் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை க்கு அச்சுவெல்லம் இருந்தால் சுலபமாக செய்து முடிக்க முடியும் காய்ச்சி வடிகட்டிய வேண்டிய அவசியமில்லை அப்படியே போட்டு விடலாம். நேரம் மிச்சமாகும். வெல்லம் மற்றும் சீனியை சேர்த்து செய்வதால் கொழுக்கட்டையின் சுவை அபரிமிதமாக இருக்கும். Santhi Chowthri -
டல்கோன காபி
#goldenapron3#book#nutrient1காபி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காபி மிக சுவையான மற்றும் அசத்தலான காபி. Santhanalakshmi -
-
டல்கோனா காபி
#lockdown#book#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான காபி தயாரிக்கலாம். Santhanalakshmi -
கேரட் ரவை புட்டிங்
#கேரட்கேரட் பத்தி எல்லாரும் அருமையா சமைக்கிறாங்க இப்ப புதுசா நிறைய பேரு வீட்டுல இருப்பதினால் விதவிதமா எல்லாவகை சமையலும் செய்து அசத்துகின்றன அருமையாக இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நான் இத வந்து மூணு விதமான செய்வேன் ஒரே பொருள் தண்ணியா இருந்தா பாயசம் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் புட்டிங் ரொம்ப கெட்டியாக போயிருச்சுனா கேசரி மூன்று முகம் கேரட் சமையல் Chitra Kumar -
-
-
கும்பகோணம் டிகிரி காப்பி
#vattaram11..பில்டர் காப்பி என்றால் எல்லோர் நினைவுக்கும் வருவது கும்பகோணம் டிகிரி காபிதான்... அதும் வீட்டிலே பிரெஷ்ஷா பில்டரில் காப்பி தூள் சேர்த்து செய்யும் போது அதின் சுவையும் வாசவுமே தனி... Nalini Shankar -
-
-
-
-
ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதிலிருந்து கார்ன் , நெய்யையும் வைத்து இந்த கீர் செய்துள்ளோம். #goldenapron3 #book Akzara's healthy kitchen -
147.வடிகட்டி காபி
வடிப்பான் காபி அனைத்து அந்த காதலர்கள், இங்கே சரியான தென் இந்திய வடிப்பான் காபி தயார் பாரம்பரிய முறை. Meenakshy Ramachandran -
-
-
-
More Recipes
கமெண்ட்