மாம்பழம் மில்க் கிரீம் புட்டிங்

Afra bena
Afra bena @cook_20327268
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கன்டஸ்டுமில்க்
  2. சாக்லேட் சாஸ்
  3. மாம்பழம் -1
  4. பால் 1கப்
  5. கிரீம்
  6. பொடித்த சர்க்கரை
  7. வெனிலா எசென்ஸ் -1டீஸ்பூன்
  8. ஜெலட்டின் -2தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் மாம்பழம் -ஐ பாதியாக நறுக்கி மிக்ஸியில் கூழ் போல் அரைத்து கொள்ளவும்.

  2. 2

    ஜெலட்டின் -ஐ ஒரு பவுலில் சுடுநீரில் போட்டு கலந்து வைத்து கொள்ளவும்.

  3. 3

    பின் மாம்பழம் கூழ், ஜெலட்டின் கலவை,கன்டஸ்டுமில்க் இவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் ஊ ற்றவும்.

  4. 4

    அவற்றை ஃப்ரிஜில் வைக்கவும். பின் அடுப்பில் பாத்திரம் வைத்து பாலை ஊற்றி மிதமான தீயில் வைக்கவும்.

  5. 5

    அவற்றில் கிரீம், அகர்அகர்,பொடித்த சர்க்கரை,வெனிலா எசென்ஸ் அனைத்தையும் கலந்து மிதமான தீயில் வைத்து கலந்து விடவும்.

  6. 6

    பாலை கொதிக்க வைக்க கூடாது..பத்து நிமிடத்திற்கு பிறகு பால் கிரீம் -ஐ அந்த டம்ளரில் ஊற்றி ஃப்ரிஜில் வைக்கவும்.

  7. 7

    பின் சாக்லேட் சாஸை கலந்து மீண்டும் மூன்றாவது லேயராக ஊற்றி வைக்கவும்.

  8. 8

    பின் புட்டிங் தயாரானதும் அதன் மேல் மாம்பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி மேலே வைத்து பரிமாறவும். அல்லது நட்ஸ் தூவி பரிமாறவும். ஜில்லுனு மாம்பழம் மில்க் கிரீம் புட்டிங் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes