ஹெல்தி பர்கர் இட்லி 🍔

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#இட்லி
குழந்தைகளுக்கு இதுபோல் வித்தியாசமாக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதில் கோதுமை ரவை மற்றும் காய்கறிகள் சேர்ந்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமான உணவு.

ஹெல்தி பர்கர் இட்லி 🍔

#இட்லி
குழந்தைகளுக்கு இதுபோல் வித்தியாசமாக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதில் கோதுமை ரவை மற்றும் காய்கறிகள் சேர்ந்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமான உணவு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. இட்லிக்கு :-
  2. ஒரு கப் கோதுமை ரவை
  3. பச்சை மிளகாய்
  4. துருவிய இஞ்சி
  5. தேவைக்கேற்ப உப்பு
  6. தயிர் ஒரு கப்
  7. ஆலு டிக்கி செய்ய:-
  8. 3 வேகவைத்த உருளைக்கிழங்கு
  9. 1 பொடியாக நறுக்கிய வெங்காயம்
  10. 1 பச்சை மிளகாய்
  11. 1/2 கப் துருவிய கேரட்
  12. 1/2 கப் பச்சைப் பட்டாணி
  13. 1/2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  14. 1டேபிள்ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  15. 1/2டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  16. 1/2டீஸ்பூன் தனியா பொடி
  17. கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் கோதுமை மாவை லேசாக வறுத்து,தயிர்,தேவைக்கேற்ப உப்பு,சிறிது நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து 2 மணி நேரம் ஊற வைத்து பின்பு ஒரு டபராவில் எண்ணெய் தடவி இட்லியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது வதக்கி,பின்பு அதில் துருவிய கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி,மிளகாய்த்தூள்,கரம் மசாலா, தனியாத் தூள்,மஞ்சள் தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி,அதில் வேகவைத்த உருளைக்கிழங்கை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து டிக்கி ரெடி செய்து கொள்ளவும்.

  3. 3

    ரெடி செய்து வைத்த உருளைக்கிழங்கு மசாலாவை தோசைக்கல்லில் சிறிது வெண்ணெய் சேர்த்து சிறிது கடினமான கட்டியதாக டோஸ்ட் செய்து எடுக்கவும். அதேபோல் வேக வைத்த கோதுமை ரவா இட்லியை இரண்டாக வெட்டி சிறிது வெண்ணெய் சேர்த்து தோசைக்கல்லில் பிரெட் போல் டோஸ்ட் செய்து கொள்ளவும்.

  4. 4

    இப்போது டோஸ்ட் செய்த இட்லியை ஒரு பாகத்தில் கெட்சப் தடவி,செய்த வெஜிடபிள் டிக்கியை வைத்து,அதன் மேல் சிறிது கொத்தமல்லி சட்னி தடவி,மீண்டும் பாதி இட்லியை வைத்து மூடவும். இப்போது சுவையான இட்லி பர்கர் ரெடி.

  5. 5

    ஒரு உருளைக்கிழங்கை நீட்டமாக அறிந்து,மூன்று நிமிடம் வெந்நீரில் வேகவைத்து, பின்பு அதை எண்ணெயில் பொரித்து எடுத்து ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் ரெடி செய்து கொள்ளவும்.

  6. 6

    கொத்தமல்லி சட்னி மற்றும் டொமேட்டோ கெட்சப் உடன் பர்கர் இட்லி செட்டாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes