Bread Bhurji 🍞🍳

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#lockdown2 # goldenapron3
முட்டை ,கோதுமை ,கேரட் & பட்டாணி என அனைத்தும் சேர்ந்து இருப்பதால் அனைத்து விதமான சத்துகளும் நிறைந்த சுலபமான காலை சிற்றுண்டி. குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்.

Bread Bhurji 🍞🍳

#lockdown2 # goldenapron3
முட்டை ,கோதுமை ,கேரட் & பட்டாணி என அனைத்தும் சேர்ந்து இருப்பதால் அனைத்து விதமான சத்துகளும் நிறைந்த சுலபமான காலை சிற்றுண்டி. குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 4கோதுமை பிரெட் துண்டுகள்
  2. 1 முட்டை
  3. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  4. 1 பச்சை மிளகாய்
  5. 1 பொடியாக நறுக்கிய வெங்காயம்
  6. 1/2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1 பொடியாக நறுக்கிய தக்காளி
  8. 1 கப் கேரட் & பச்சை பட்டாணி
  9. தேவைக்கேற்ப உப்பு
  10. மஞ்சள்தூள் சிறிதளவு
  11. 1/2டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  12. 1/2டீஸ்பூன் சிக்கன் மசாலா பொடி
  13. கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    படத்தில் உள்ளது போல் காய்கறிகளை அறிந்தும்,பிரெட் துண்டுகளை பொடி செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் சூடேறியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது,தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

  3. 3

    பின்பு அதில் கேரட் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும். பின்பு மஞ்சள் தூள்,சிவப்பு மிளகாய் தூள், சிக்கன் மசாலா பொடி மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி 2 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.

  4. 4

    கேரட் சிறிது வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி பொரித்துக் கொள்ளவும். கடைசியாக பொடித்து வைத்த பிரெட்டை சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயில் 2 நிமிடம் வேகவைத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறினால் சுவையான Bread Bhurji ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes