தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 600கிராம் காளான்
  2. 1கப் வெங்காய விழுது
  3. 1கப் தக்காளி விழுது
  4. 4பச்சை மிளகாய்
  5. 2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1ஸ்பூன் தனியாத்தூள்
  7. 1ஸ்பூன் சீரகத்தூள்
  8. 3டேபிள்ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  9. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. உப்பு தேவையான அளவு
  11. கறிவேப்பிலை சிறிது
  12. கொத்தமல்லி தழை சிறிது
  13. 1கப் தேங்காய் துருவல்
  14. 10முந்திரி
  15. 6டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  16. 3ஸ்பூன் நெய்
  17. 1/2ஸ்பூன் கடுகு
  18. 1/2ஸ்பூன் சோம்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    காளானை சுத்தம் செய்து நறுக்கி அலசி வைக்கவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடிக்க விடவும்

  3. 3

    பின் வெங்காய விழுது மற்றும் நறுக்கிய பச்சைமிளகாய் கறிவேப்பிலை சிறிது சேர்த்து வதக்கவும்

  4. 4

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்

  6. 6

    பின் அலசிய காளானை சேர்த்து உப்பு தூள் வகைகள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

  7. 7

    தேங்காய் துருவல் உடன் முந்திரி சேர்த்து நன்கு அரைத்து பிழிந்து பால் எடுக்கவும்

  8. 8

    காளான் நன்கு கொதித்ததும் தேங்காய் பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  9. 9

    பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  10. 10

    சுவையான காளான் கிரேவி ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes