ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#goldenapron3

#Lockdown1
கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .பச்சை பட்டாணி, கோதுமை மாவு இருந்தது ,வாங்கி வந்தேன் . சப்பாத்தி செய்து தொட்டுக்க, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா செய்தேன் .

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala

#goldenapron3

#Lockdown1
கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .பச்சை பட்டாணி, கோதுமை மாவு இருந்தது ,வாங்கி வந்தேன் . சப்பாத்தி செய்து தொட்டுக்க, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா செய்தேன் .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45Mins
2 பரிமாறுவது
  1. பச்சை பட்டாணி 1 கப்
  2. பெரிய வெங்காயம் 3
  3. பச்சை மிளகாய் 2
  4. தக்காளி 2
  5. பூண்டு 5 பல்
  6. இஞ்சி 1 துண்டு
  7. மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
  8. சீரகத்தூள் 1 டீஸ்பூன்
  9. தனியா தூள் 1 டீஸ்பூன்
  10. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  11. கரம் மசாலா தூள் 1/2 டீஸ்பூன்
  12. முந்திரி 6
  13. தயிர் 2 டேபிள் ஸ்பூன்
  14. உப்பு
  15. தாளிக்க
  16. வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
  17. ஆயில் 2 டேபிள் ஸ்பூன்
  18. பட்டை 1
  19. கிராம்பு 2
  20. ஏலக்காய் 1
  21. பிரிஞ்சி இலை 1
  22. கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

45Mins
  1. 1

    பச்சை பட்டாணி 1 கப் கழுவி வைக்கவும்.குக்கரில் பச்சை பட்டாணி சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.பெரிய வெங்காயம் தோல் நீக்கி கழுவி நறுக்கி மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.தக்காளி 2 கழுவி நறுக்கி மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்,சீரகத்தூள் 1 டீஸ்பூன்,தனியா தூள் 1 டீஸ்பூன்,மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் 1/2 டீஸ்பூன் உப்பு எடுத்து வைக்கவும்.இஞ்சி 1 துண்டு,பூண்டு 5 பல் தோல் நீக்கி கழுவி பச்சை மிளகாய் 2 விதை நீக்கி,பொடியாக நறுக்கி வைக்கவும்.

  2. 2

    முந்திரி 6 கழுவி தண்ணீரில் ஊற விடவும்.தயிர் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து வைக்கவும். வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்,ஆயில் 2 டேபிள் ஸ்பூன், பட்டை 1,கிராம்பு 2,பிரிஞ்சி இலை 1,ஏலக்காய் 1,எடுத்து வைக்கவும்.மிக்ஸியில் தயிர் ஊறிய முந்திரி அரைத்து வைக்கவும்.பச்சை பட்டாணி குக்கரில் வேக வைத்ததை வடித்து வைக்கவும்.

  3. 3

    கடாயில் வெண்ணெய் சிறிது ஆயில் ஊற்றி பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை ஏலக்காய் தாளித்து நறுக்கிய இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அரைத்த வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்கி மிளகாய் தூள் மஞ்சத்தூள் கரம் மசாலா தூள் தனியா தூள் சீரகத்தூள் உப்பு சேர்த்து கலக்கி சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.முந்திரி தயிர் அரைத்ததை சேர்க்கவும்.கலக்கி கிளறி விடவும்.

  4. 4

    வெந்த பச்சை பட்டாணி சேர்க்கவும்.கொதிக்க விடவும்.கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கவும்.சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா ரெடி.😋😋

  5. 5

    கோதுமை மாவு பிசைந்து சப்பாத்தி செய்து தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes