ஈஸியான பால் பாயசம்

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#book
#lockdown
இப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுலபமாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஸ்வீட் பால் பாயசம்.

ஈஸியான பால் பாயசம்

#book
#lockdown
இப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுலபமாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஸ்வீட் பால் பாயசம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
5 நபர்
  1. 50 கிராம் ஜவ்வரிசி,
  2. 50 கிராம் சேமியா,
  3. 1/2 லிட்டர் காச்சிய பால்,
  4. 1 கப் சக்கரை,
  5. 2டீஸ்பூன் நெய்,
  6. 25 கிராம் முந்திரிப்பருப்பு,
  7. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் இதமான சூட்டில் ஜவ்வரிசியை நன்கு சத்தம் வரும் வரை வதக்கவும்.

  2. 2

    அரை லிட்டர் தண்ணீர் எடுத்து நன்கு கொதிக்க வைத்து, அதனுள் ஜவ்வரிசியை சேர்க்கவும்.

  3. 3

    ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து முந்திரியை வறுத்து எடுக்கவும். பின்னர் அதே கடாயில் இன்னொரு டீஸ்பூன் நெய் சேர்த்து சேமியாவை லேசாக வதக்கி எடுக்கவும்.

  4. 4

    ஜவ்வரிசி கண்ணாடி போல் வேகும் வரை கொதிக்க விடவும். அடுத்து வதக்கிய சேமியாவை சேர்க்கவும்.

  5. 5

    அடுத்ததாக வறுத்த முந்திரியை போடவும். இப்போது 1 கப் சக்கரை மற்றும் 1/2 லிட்டர் காச்சிய பாலையும் ஊற்றவும்.

  6. 6

    3-5 நிமிடம் பால் கொதித்ததும் அடுப்பை ஆப் செய்யவும். சுவையான பால் பாயசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes