பச்சை வேர்க்கடலை குழம்பு

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Book
#கோல்டன் அப்ரோன் 3
#lockdown1
ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் .

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40Mins
2 பரிமாறுவது
  1. பச்சை வேர்க்கடலை 1 கப்
  2. துவரம் பருப்பு 1/4 கப்
  3. சின்ன வெங்காயம் 12
  4. தக்காளி 1
  5. புளி 1 எலுமிச்சை அளவு
  6. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  7. உப்பு
  8. வறுத்து அரைக்க
  9. ஆயில் 1 டீஸ்பூன்
  10. கடலை பருப்பு 1 டீஸ்பூன்
  11. தனியா 2 டீஸ்பூன்
  12. சீரகம் 1 டீஸ்பூன்
  13. மிளகு 5
  14. வரமிளகாய் 5
  15. தேங்காய் துருவியது 1 1/2 டேபிள் ஸ்பூன்
  16. தாளிக்க
  17. ஆயில் 1 டீஸ்பூன்
  18. கடுகு 1 டீஸ்பூன்
  19. கருவேப்பிலை
  20. கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

40Mins
  1. 1

    பச்சை வேர்க்கடலை 1 கப் கழுவி குக்கரில் 3 விசில் விட்டு வேக விடவும்.வெந்தவுடன் வடித்து வைக்கவும்.துவரம் பருப்பு 1/4 கப் கழுவி குக்கரில் வேக விட்டு எடுத்து வைக்கவும்.

  2. 2

    புளி 1 எலுமிச்சை அளவு ஊற வைக்கவும்.தனியா 2 டீஸ்பூன்,கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்,வரமிளகாய் 5,சீரகம் 1 டீஸ்பூன், மிளகு 5,தேங்காய் துருவல் 1 1/2 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.

  3. 3

    சின்ன வெங்காயம் 12 தோல் நீக்கி கழுவி வைக்கவும். தக்காளி 1 கழுவி நறுக்கி வைக்கவும்.கடாயில் ஆயில் 1 டீஸ்பூன் ஊற்றி கடலை பருப்பு தனியா,சீரகம்,மிளகு, வரமிளகாய்,துருவிய தேங்காய் வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.

  4. 4

    குக்கரில் வெந்த வேர்கடலையுடன் அரைத்த விழுது,மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்,உப்பு சேர்த்து வைக்கவும்.கடாயில் ஆயில் 1 டீஸ்பூன் விட்டு கடுகு கருவேப்பிலை சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி,புளி தண்ணீர் மிதமாக கரைத்து குக்கரில் சேர்க்கவும்.

  5. 5

    வெந்த துவரம் பருப்பு சேர்க்கவும்.நன்கு கலக்கி விடவும்.குக்கரில் 2 விசில் விட்டு இறக்கி கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

  6. 6

    சுவையான வேர்க்கடலை குழம்பு ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes