கேப்புச்சினோ சாக்லேட் கோல்கப்பே #goldenapron3 #book

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

#goldenapron3 இந்த வார போட்டியின் கண்டுபிடித்த வார்த்தையில் சாட் ஐட்டம் இருந்தது அதை மையமாக கொண்டு புதுமையான கோல்கப்பே செய்துள்ளோம் செய்முறை காணலாம் வாங்க

கேப்புச்சினோ சாக்லேட் கோல்கப்பே #goldenapron3 #book

#goldenapron3 இந்த வார போட்டியின் கண்டுபிடித்த வார்த்தையில் சாட் ஐட்டம் இருந்தது அதை மையமாக கொண்டு புதுமையான கோல்கப்பே செய்துள்ளோம் செய்முறை காணலாம் வாங்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கப் கோதுமை மாவு
  2. கால் கப் ரவை
  3. உப்பு தேவையான அளவு
  4. ஒரு ஸ்பூன் எண்ணெய்
  5. தண்ணீர் தேவையான அளவு
  6. எண்ணை பொரிப்பதற்கு ஏற்ப
  7. காபி பொடி இரண்டு பாக்கெட்
  8. சர்க்கரை 2 டீஸ்பூன்
  9. சாக்லேட் 50 கிராம்
  10. ஐஸ்கிரீம் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    இப்பொழுது கோல்கப்பே செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும் அதில் ஒரு கப் அளவு கோதுமை மாவு சேர்க்கவும்.

  2. 2

    இப்பொழுது அதில் கால் கப் அளவு ரவையை சேர்க்கவும். ஒரு ஸ்பூன் எண்ணெய் விடவும்.அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    மாவு சப்பாத்தி மாவை விட கொஞ்சம் இலகுவாக இருந்தால் போதும். மாவை ஒரு பத்து நிமிடம் ஈரத் துணியைப் போட்டு மூடி வைக்க வேண்டும்.

  4. 4

    பத்து நிமிடம் பிறகு அந்த மாவை இரண்டு போஷன் களாக பிரிக்க வேண்டும். இப்போது முதல் போர்ஷனை பூரி கட்டையில் வைத்து நன்கு தேய்த்துக் கொள்ளவும். அதுவரையில் இரண்டாவது போசன் மாவை ஈரத் துணியைப் போட்டு மூடி வைக்க வேண்டும்.

  5. 5

    நன்கு தேய்த்த பிறகு பாட்டில் மூடியை வட்டமாக வருவதற்கு பாட்டில் மூடியை அல்லது அந்த கிண்ணத்தை வைத்து வட்டமாக எடுத்துக் கொள்ளவும். அதேபோல் இரண்டாவது போசணையும் அதைப்போல் செய்து எடுத்துக் கொள்ளவும்.

  6. 6

    இப்பொழுது இதை இரண்டையும் ஈரத்துணி போட்டு நன்கு மூடி வைக்க வேண்டும். இதற்கான ஸ்டாப்பிங் இப்பொழுது செய்து விடலாம்

  7. 7

    கேப்புச்சினோ செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அளவு காபி பவுடர் இரண்டு ஸ்பூன் அளவு சர்க்கரை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொண்டே இருக்க வேண்டும் அது நன்கு க்ரீமி டெக்ஸ்டர் வரும் வரையில். க்ரீமி பெட்டர் வந்தவுடன் நம்ப கேப்புச்சினோ ரெடியாகிவிட்டது.

  8. 8

    சாக்லேட் 50 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். அதை ஒரு கடாயில் போட்டு நன்கு உருக்கி கொள்ளவும். தண்ணீர் ஊற்றி உருக்கி கொள்ள வேண்டும். இப்போது டப்பிங்கும் தயாராகிவிட்டது.

  9. 9

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணையை காய விடவும். ஆயில் சூடான பிறகு நாம் திரட்டி வைத்திருக்கும் கோல்கப்பே யை எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொறித்து எடுக்க வேண்டும்.

  10. 10

    நந்து மொறுமொறுப்பான கோல்கப்பே தயாராகிவிட்டது. இப்போது அதில் ஒரு துளையிட்டு ஒரு ஸ்பூன் வெனிலா ஐஸ்கிரீம் சேர்க்கவும். அதன்மேல் கேப்புச்சினோ கிரீமையும் சேர்க்கவும். அதற்குமேல் மில்ட் செய்து வைத்திருக்கும் சாக்லெட் சாஸ் செய்யும் ஊற்றி பரிமாறினால் சுவையான மற்றும் புதுமையான கேப்புச்சினோ சாக்லேட் கோல்கப்பே தயாராகிவிட்டது ஒருமுறை செய்து பாருங்கள் நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Akzara's healthy kitchen
அன்று

Similar Recipes