இன்ஸ்டன்ட் பாம்பே அல்வா #leftover

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய பொருட்கள் மிச்சமாகிறது அதை நாம் உபயோகிப்பதில்லை . வேஸ்ட் செய்கிறோம் அதை எப்படி உபயோகிப்பது என்பதற்கு ஒரு புதுமையான ரெசிபி இதோ உங்களுக்காக வாங்க செய்முறையை பார்க்கலாம்.#leftover

இன்ஸ்டன்ட் பாம்பே அல்வா #leftover

நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய பொருட்கள் மிச்சமாகிறது அதை நாம் உபயோகிப்பதில்லை . வேஸ்ட் செய்கிறோம் அதை எப்படி உபயோகிப்பது என்பதற்கு ஒரு புதுமையான ரெசிபி இதோ உங்களுக்காக வாங்க செய்முறையை பார்க்கலாம்.#leftover

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5நபர்களுக்கு
  1. 1பெரிய கப் மீதமான சாதம்
  2. 1 கப் காய்ச்சிய பால்
  3. 1 கப் சர்க்கரை
  4. 3 ஏலக்காய்
  5. 50 கிராம் நெய்
  6. 3 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார்
  7. தேவையானளவு ஃபுட் கலர்
  8. 50 மில்லி தண்ணீர்
  9. ட்ரை ஃப்ரூட்ஸ் தேவையானளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு மீனின் சைஸ் மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளவும் அதில் மூன்று ஏலக்காய் மற்றும் நிச்சயமாக எடுத்து வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து அதனுடன் ஒரு 50 எம்எல் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக ஒரு கோரசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.இப்பொழுது அதில் 3 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் பவுடர் மற்றும் காய்ச்சிய பால் ஒரு கப் அளவு சேர்த்து நன்கு அரைத்து ஒரு க்ரீமி பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு அடிகனமான பாத்திரத்தை வைக்கவும்.அதில் ஒரு கப் அளவு சர்க்கரை சேர்த்து அரை கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    இந்த அல்வாவிற்கு பாகுபதம் தேவையில்லை சர்க்கரை கரைந்தவுடன். நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் சேர்த்து. கைவிடாமல் நன்கு கலந்து கொள்ளவும். அதில் இப்போது சிறிதளவு ஃபுட் கலர் சேர்த்து கொள்ளவும் உங்களுக்கு பிடித்தமான ஃபுட் கலரை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

  4. 4

    போட்டு நன்கு கலந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது 2 டீஸ்பூன் 2 டீஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு விட்டு சேர்த்து கலந்து கொள்ளவும். ரெசிப்பி இருக்கு எனக்கு 50 கிராம் நெய் உபயோக படுத்தினேன். இப்பொழுது கைவிடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும் சிறிது நேரத்துக்கெல்லாம் ஹல்வா கன்சிஸ்டன்ஸி யில் வந்துவிடும். இதை செய்வதற்கு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

  5. 5

    அல்வா கன்சிஸ்டன்ஸி வந்த பிறகு கடைசியாக டீஸ்பூன் நெய் விட்டு நன்கு கலந்து விட்டு அதன் மேல் முந்திரி திராட்சை களை உங்களுக்கு பிடித்தமான டிரைஃப்ரூட்ஸ் களை சேர்த்து நன்கு கலந்து இறக்கி பரிமாறலாம். சுவையான மற்றும் மிகவும் சுலபமான இன்ஸ்டன்ட் பாம்பே அல்வா. நீங்கள் இதை மிச்சமான சாதத்தில் தான் செய்தீர்கள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள் அந்த அளவுக்கு சுவையாக இருக்கும் ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Akzara's healthy kitchen
அன்று

Similar Recipes