மாம்பழ ஐஸ்க்ரீம்

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

மில்க் மேட், பிரஷ் கீரீம் இல்லாமல்

மாம்பழ ஐஸ்க்ரீம்

மில்க் மேட், பிரஷ் கீரீம் இல்லாமல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. மாம்பழம்-2
  2. பால்-1/4 லிட்டர் (1 கப்)
  3. பாலாடை-2 டீஸ்பூன்
  4. கார்ன் பிளவர் மாவு-2 டீஸ்பூன்
  5. சர்க்கரை-3/4 கப்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மாம்பழ தோல் சீவி விட்டு அதன் பல்ப் மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும்..பாலை நன்றாக காய்ச்சி 150 ml ஆகும் வரை நன்கு காய்ச்சி, அதில் 2 டீஸ்பூன் கார்ன் பிளவர் மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து அதை பாலுடன் கலந்து கொள்ளவும்.. அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விடவும்... பால் திக்கான பதம் வந்ததும்(பேஸ்ட் போல்) அடுப்பை அணைத்து, நன்றாக ஆற விடவும்.

  2. 2

    நன்கு ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு, அதனுடன் மாம்பழ பல்ப்,2 டீஸ்பூன் பாலாடை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.. அரைத்த கலவையை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு அதை பிரிட்ஜ்ஜில் ப்பிரீஷரில் வைக்கவும்...

  3. 3

    2 மணி நேரம் கழித்து மீண்டும் மிக்ஸியில் போட்டு நன்றாக 5 நிமிடங்கள் வரை நன்கு அரைத்துக் கொள்ளவும்.. இப்போது மிகவும் கீரீம் போன்ற கலவை வரும்..அதை அதே காற்று புகாத டப்பாவில் எடுத்து போட்டு,அதை ஒரு பிளாஸ்டிக் கவர் போட்டு மூடி, அதன் மேல் டப்பாவின் மூடி போட்டு நன்றாக மூடி 8 மணி நேரம் ப்பிரீஷரில் வைக்கவும்.8மணி நேரம் கழித்து எடுக்க ஜில்லென்ற சுவையான மாம்பழ ஐஸ்க்ரீம் ரெடி.. ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீம் உடன் விருப்பப்படி துருவிய சாக்லேட், பொடியாக நறுக்கிய முந்திரி உலர் திராட்சை பாதாம் போன்றவை சேர்த்து பரிமாறவும்

  4. 4

    நன்றி.. ஹேமலதா கதிர்வேல்.. கோவை பாசக்கார பெண்கள்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes