#galatta சௌசௌ‌ தோல் சட்னி

Ranjani Srinivasan
Ranjani Srinivasan @cook_22595687

#galatta சௌசௌ‌ தோல் சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15  நிமிடம்
3 பரிமாறுவது
  1. சௌசௌ தோல்-1 கப்
  2. தேங்காய்-2 மேசைகரண்டி
  3. சிறியவெங்காயம் -10
  4. வர மிளகாய் -5
  5. கடுகு- ஒரு தேக்கரண்டி
  6. உளுத்தம்பருப்பு -2 தேக்கரண்டி
  7. கடலைப்பருப்பு -2 தேக்கரண்டி
  8. பெருங்காயம் -சிறிதளவு
  9. உப்பு -தேவையான அளவு
  10. மஞ்சள் தூள் -ஒரு சிட்டிகை
  11. நல்லெண்ணெய் -3 தேக்கரண்டி
  12. புளி-ஒரு சுண்டைக்காய் அளவு
  13. கருவேப்பிலை -தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15  நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்த பின் உளுத்தம்பருப்பு,கடலை பருப்பு,வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    சிறிய வெங்காயம்,கருவேப்பிலை, மஞ்சள் தூள் முதலியவற்றை சேர்க்கவும்.

  3. 3

    வெங்காயம் வதங்கியதும் சௌசௌ தோலை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு, பெருங்காயம் மற்றும் புளி சேர்த்து வதங்கியதும் ஆறவிடவும்.

  4. 4

    சௌசௌ வதங்கிய பின்பு இவ்வாறு காணப்படும்.

  5. 5

    அந்தக் கலவையை அரைக்கவும். கடைசியாக கடுகு,உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து இறக்கவும். சுவையான சட்னி பரிமாறுவதற்கு தயாராகிவிடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ranjani Srinivasan
Ranjani Srinivasan @cook_22595687
அன்று

Similar Recipes