கேரட் போளா

Navas Banu
Navas Banu @cook_17950579

# Carrot
# book

கேரட் போளா

# Carrot
# book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பெரிய கேரட் -1
  2. சீனி - 1/2 கப்
  3. பால் பவுடர் - 1/4 கப்
  4. முட்டை - 3
  5. வெனிலா எஸ்ஸென்ஸ் - 1/4 டீஸ்பூன்
  6. முந்திரிப் பருப்பு - 15
  7. கிஸ்மிஸ் - 15
  8. நெய் - 4 டீஸ்பூன்
  9. உப்பு - ஒரு சிட்டிகை

சமையல் குறிப்புகள்

  1. 1

    கேரட்டை தோல் நீக்கி விட்டு துருவி எடுத்துக் கொள்ளவும்.துருவிய கேரட்டில் சிறிது மாற்றி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் துருவிய கேரட்,சீனி, பால் பவுடர், முட்டை, வெனிலா எஸ்ஸென்ஸ், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து பேஸ்ட் பருவத்தில் அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு பேன் அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் நெய் விட்டு முந்திரிப் பருப்பையும், கிஸ்மிஸ் பழத்தையும் பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.

  4. 4

    முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பொரித்த நெய்யில் மாற்றி வைத்திருக்கும் கேரட் துருவலை போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.

  5. 5

    அதே பேனில் 2 டீஸ்பூன் நெய் விட்டு சூடானதும் அதில் அரைத்து வைத்துள்ள கேரட் பேஸ்டை ஊற்றவும்.

  6. 6

    கேரட் பேஸ்டின் மீது பொரித்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழத்தையும் தூவி கொடுக்கவும்.

  7. 7

    பிறகு, இதன் மீது நெய்யில் வதக்கி வைத்திருக்கும் கேரட் துருவலையும் தூவி கொடுக்கவும்.

  8. 8

    பேனை மூடி வைத்து அடுப்பை ஸிம்மில் வைத்து 15 நிமிடம் வேக விடவும்.

  9. 9

    வெந்ததும் தட்டிற்கு மாற்றவும்.

  10. 10

    அருமையான சுவையில் மிருதுவான கேரட் போளா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes