கேரட் ஃபலூடா

Feast with Firas
Feast with Firas @Feastwithfiras

செயற்கையான நிறமூட்டிகளோ செயற்கை நறுமணப் பொருட்களோ சேர்க்காத ஒரு இயற்கை பானம்.ஒரு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்துவார்கள்.#carrotrecipe,#carrotfalooda,#falooda

கேரட் ஃபலூடா

செயற்கையான நிறமூட்டிகளோ செயற்கை நறுமணப் பொருட்களோ சேர்க்காத ஒரு இயற்கை பானம்.ஒரு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்துவார்கள்.#carrotrecipe,#carrotfalooda,#falooda

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. கேரட் சிரப் செய்ய:
  2. கேரட்-1
  3. சர்க்கரை-½கப்
  4. பலூடா செய்ய:
  5. கேரட்-2
  6. பால்-1கப்
  7. காய்ச்சிய பால்-1 கப்
  8. சர்க்கரை -2 tbsp
  9. கன்டண்ஸ்டு மில்க்-¼கப்
  10. சப்ஜா விதை-2tsp
  11. சேமியா-2tbsp
  12. முந்திரி,dates அலங்கரிக்க

சமையல் குறிப்புகள்

  1. 1

    சப்ஜா விதைகளை சிறிதளவு தண்ணீரில் ஊற வைக்கவும்.

  2. 2

    ஒரு கேரட்டை பொடியாக துருவி சர்க்கரையுடன் சேர்த்து மிதமான தீயில் கிளறி விடவும்.சர்க்கரை கரைந்து பாகு பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

  3. 3

    சேமியாவை சிறிதளவு தண்ணீரில் வேக வைத்து தனியே எடுத்து வைக்கவும்.

  4. 4

    இரண்டு கேரட்டுகளை துண்டுகளாக வெட்டி 1 கப் பால் சேர்த்து வேக வைக்கவும்.அத்துடன் காய்ச்சிய பால், கன்டண்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    ஒரு கண்ணாடி டம்ளரில் இரண்டு கரண்டி கேரட் சிரப் அடுத்து இரண்டு கரண்டி சப்ஜா விதை அடுத்து இரண்டு கரண்டி சேமியா அடுக்கடுக்காக போட்டு மெதுவாக கேரட் பால் கலவையை ஊற்றவும்.முந்திரி, dates தூவி, ஐஸ் கட்டிகள் போட்டு பரிமாறவும் ‌

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Feast with Firas
Feast with Firas @Feastwithfiras
அன்று

Similar Recipes