எக் மஞ்சுரியன்#hungrytummyforever #nutrient1  #egg #eggmanchurian

Krithick
Krithick @cook_22897315

எக் மஞ்சுரியன்#hungrytummyforever #nutrient1  #egg #eggmanchurian

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. முட்டை 4
  2. மிளகு தூள்
  3. உப்பு
  4. எண்ணெய்
  5. மைதா மாவு
  6. கார்ன்ஃப்ளார்
  7. மிளகாய்த்தூள்
  8. தண்ணீர்
  9. வெங்காயம்
  10. டொமேட்டோ சாஸ்
  11. சோயா சாஸ்
  12. இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் 4 முட்டையுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் இந்த முட்டை கலவையை ஊற்றி இட்லி குண்டானில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.

  2. 2

    மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு கார்ன் ஃப்ளார் உப்பு மிளகாய்த்தூள் தண்ணீர் அனைத்தையும் சேர்த்து பஜ்ஜி மாவு போல் மிக்ஸ் பண்ணிக் கொள்ளவும். வேகவைத்த முட்டையை சிறிது சிறிதாக நறுக்கி இந்தக் கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் வறுத்து எடுக்கவும்.

  3. 3

    தனியாக ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் டொமேட்டோ சாஸ்,சோயா சாஸ் மற்றும் தேவையான உப்பு கலந்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

  4. 4

    இப்பொழுது தயாராக இருக்கும் பொரித்த முட்டையை இதில் சேர்த்து 5 நிமிடத்திற்கு மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான முட்டை மஞ்சூரியன் ரெடி.!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Krithick
Krithick @cook_22897315
அன்று

Similar Recipes