கோதுமை தோசை (வித்தியாசமான முறையில்) (Kothumai dosai Recipe in Tamil)

கோதுமை தோசை (வித்தியாசமான முறையில்) (Kothumai dosai Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்... ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்... மாவு கரைசல் தோசை மாவை விட சற்று தண்ணியாக இருக்க வேண்டும்..(ரவா தோசை மாவு பதத்தில்)
- 2
மாவை ஒரு 5 நிமிடங்கள் ஊறவைத்து பின், ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு கரண்டி மாவை ரவா தோசை போன்று ஊற்றி, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும்... ரவா தோசை சுவையில் சூடான சுவையான மொறு மொறு கோதுமை தோசை ரெடி... வெறும் மாவை தோசையாக செய்வதற்கு இப்படி செய்தால் சுவையும் வித்தியாசமான முறையில் இருக்கும்.
- 3
தேவைப்படின் பெரிய வெங்காயம் ஒன்றை நன்கு பொடியாக நறுக்கி சேர்த்தும் செய்யலாம்..நன்றி.. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
Keywords
Similar Recipes
More Recipes










கமெண்ட்