கால்சியம் புரதச்சத்து நிறைந்த உருண்ட/(Calcium Protein Rich Balls recipe in tamil)

#Nutrient1
#book
இதில் சேர்த்து இருக்கும் அனைத்துப் பொருட்களும் கால்சியம் புரதச்சத்து நிறைந்தது .குழந்தைகளுக்கு எல்லா காலங்களிலும் ஏற்றது .சர்க்கரை சேர்க்காதது .😋😋

சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவு 1/2 கப் சலித்த கடாயில் வாசனை வரும் வரை வறுத்து வைக்கவும்.1 கப் வறுத்த வேர்க்கடலை மிதமான சூட்டில் வறுத்து வைக்கவும்.1 சிறிய துண்டு பட்டை,ஏலக்காய் 4,முந்திரி 10, பாதாம் 8, பேரிச்சம்பழம் 10,1 கை பிடி திராட்சை எடுத்து வைக்கவும். வெள்ளை எள்ளு 2 டேபிள் ஸ்பூன் வறுத்து வைக்கவும்.
- 2
மிக்ஸியில் முதலில் பட்டை ஏலக்காய் பேரிச்சம்பழம் திராட்சை சேர்த்து அரைத்து,அதில் முந்திரி, பாதாம் வறுத்த வேர்க்கடலை எள்ளு சேர்த்து அரைத்து கடைசியாக ராகி மாவு சேர்த்து அரைக்கவும்.
- 3
அரைத்ததை ஒரு தட்டில் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்