எள்ளு தக்காளி தொக்கு

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#Nutrient1 book
எள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.
பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தக்காளி 4
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்
  4. தனியா தூள் 2 ஸ்பூன்
  5. கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
  6. எள்ளு 4 ஸ்பூன்
  7. பாதாம் பருப்பு 5
  8. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. ஆயில் ஒரு குழிக்கரண்டி
  11. தாளிக்க கடுகு ஒரு ஸ்பூன்
  12. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  13. சோம்பு அரை ஸ்பூன்
  14. கருவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயத்தை பொடியாக அரிந்து வைக்கவும். தக்காளியை மிக்சியில் போட்டு அடித்து வைக்கவும். ஒரு வாணலியில் எள்ளை சுத்தம் செய்து போட்டு வறுத்து எடுக்கவும். பாதாம் பருப்பையும் எள்ளுடன் போட்டு வறுத்து எடுக்கவும். வறுத்த எள் பாதாம்பருப்பைமிக்ஸி ஜாரில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு மைய அரைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சோம்பு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

  2. 2

    வெங்காயத்தை அதனுடன் போட்டு நன்கு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் மிக்ஸியில் ஜூஸ் எடுத்து வைத்துள்ள தக்காளி விழுதை அதனுடன் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வதக்கவும்.தனியா தூள் சிவப்பு மிளகாய் தூள் கரம் மசாலா தூள் மஞ்சள் தூள் தேவைக்கேற்ப உப்பு அனைத்தும் அதனுடன் சேர்த்து நன்கு சுருள வதக்கவும். ஆயில் 3 ஸ்பூன் சேர்க்கவும். நன்கு 5 நிமிடம் வதக்கவும். தக்காளி மசாலா தூள் இவற்றின் பச்சை வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள பாதாம் எள்ளு விழுதை சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.

  3. 3

    அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கொதித்ததும் சுருள வதக்கி இறக்கவும். சுவையான சத்துள்ள எள்ளு தக்காளி தொக்கு தயார். இட்லி சப்பாத்தி சாதம் மூன்றுக்கும் ஏற்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes