கொண்டை கடலை குருமா\ சென்னா குருமா

வெள்ளை கொண்டைக்கடலை அதிக சத்து நிறைந்தது. புரதச் சத்து, கால்சியம் சத்து நிறைந்தது.
கொண்டை கடலை குருமா\ சென்னா குருமா
வெள்ளை கொண்டைக்கடலை அதிக சத்து நிறைந்தது. புரதச் சத்து, கால்சியம் சத்து நிறைந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவி தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
கொண்டைக்கடலையை அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் சிறிது உப்பு போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்
- 3
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நைசாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். தக்காளியையும் நைஸாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். தேங்காயை துருவி அதனுடன் அரைக்க கொடுத்துள்ள வற்றை எடுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸியில் நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்
- 4
குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பூ, இலை, ஸ்டார் பூ, சோம்பு இவற்றை சேர்த்து நன்கு வெடிக்க விடவும். பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வெள்ளையாக வதங்கும் வரை வதக்கவும்.
- 5
பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதக்கி பிறகு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்
- 6
இப்போது வேக வைத்த கொண்டைக் கடலையை அந்த தண்ணீரோடு சேர்த்து வதங்கிய உடன் சேர்க்கவும். இப்போது மிளகாய்த்தூள், மல்லி சேர்க்கவும்
- 7
பிறகு மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்
- 8
இப்போது ஒரு கப் தண்ணீர் சேர்த்து எல்லாம் சேர்ந்து கொதி வந்ததும் மூடி ஒரு விசில் விட்டு மிதமான தீயில் 5 நிமிடம் வைக்கவும். கொண்டைக்கடலை குருமா மிகவும் டேஸ்ட்டாக இருக்கும் சப்பாத்தி, சாதம், இட்லி, தோசை, நாண் எல்லாத்துக்கும் ஏற்ற சைட் டிஷ்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சரவணபவன் வெள்ளை குருமா
#combo2 மிருதுவான சப்பாத்திக்கு அட்டகாசமான சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா செய்தேன் மிக மிக ருசியாக இருந்தது. Laxmi Kailash -
-
-
-
-
-
-
கொண்டை கடலை கிரேவி மசாலா (Kondakadalai gravy masala recipe in tamil)
# GA4# WEEK 6#Chick peasசப்பாத்திக்கு சூப்பர் சைடு டீஷ் Srimathi -
-
பச்சை பயறு பருப்பு குழம்பு (Pachchaipayaru kulambu Recipe in Tamil)
புரதச் சத்து நிறைந்தது.#nutrient1 #book Renukabala -
பூந்தி பக்கோடா குருமா
* பொதுவாக குருமா என்றாலே காய்கறிகள் வைத்துதான் குருமா செய்வார்கள்.* ஆனால் இந்தக் குருமா பூந்தி மற்றும் பக்கோடா சேர்த்து செய்யும் வித்தியாசமான குருமா.*இதை இட்லி தோசை சப்பாத்தி கலந்த காய்கறி பரிஞ்சி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்#Cookwithfriends kavi murali -
வெஜிடபிள் குருமா
#combo2மிருதுவான சப்பாத்திக்கு ஏற்ற காய்கறி குருமா. புரோட்டா விற்கும் கூட இதை தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். காய்கறிகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பட்டை சோம்பு கிராம்பு ஏலக்காய் இவையெல்லாம் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தரக்கூடியது. Meena Ramesh -
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
-
-
-
ருசியான உருளைக்கிழங்கு குருமா
#GA4✓ உருளைக்கிழங்கில் அதிக அளவில் விட்டமின், தாது உப்புக்கள், நார் சத்து, பொட்டாசியம் உள்ளது.✓ உருளைக்கிழங்கு உயர்தரமான அதிக அளவு சத்து நிறைந்துள்ளது.✓ உருளைக்கிழங்கை சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையான சக்தி உடனே கிடைத்து விடும். mercy giruba -
சென்னா மசாலா சாட்
#cookwithsugu இது குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு ஸ்நாக்ஸ் ஐட்டம்... இது சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.. Muniswari G -
-
-
இறால் மசாலா
#nutrient1 #bookஇறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். MARIA GILDA MOL -
-
-
-
-
பொட்டு கடலை அவல் உப்புமா (Pottukadalai aval upma recipe in tamil)
#onepotநாம் வழக்கமாக செய்யும் அவல் உப்புமாவில் பொட்டுக் கடலையை ஊறவைத்து சேர்த்து செய்வது. பொட்டுக்கடலை அவலுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பொட்டுக்கடலை புரதச் சத்து நிறைந்தது. அவ லும் உடலுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
முட்டை இட்லி கிரேவி
#steam பொதுவாகவே அவித்து தான் முட்டை கிரேவி செய்வார்கள். சிறிது வித்தியாசமாக இட்லி சட்டியில் முட்டைகளை வைத்து இட்லி போல் செய்து கிரேவி செய்து சாப்பிட்டால் மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும். கண்டிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Laxmi Kailash
More Recipes
கமெண்ட்