தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 5பிரெட் துண்டுகள்
  2. 1 வெங்காயம்
  3. 1/2 தக்காளி
  4. 1கப் முட்டைகோஸ்
  5. 1 கேரட்
  6. 1 பச்சை மிளகாய்
  7. சிறிதளவுகறிவேப்பிலை
  8. 1/2கப் மைதா மாவு
  9. 3மேசைக்கரண்டி அரிசி மாவு
  10. தேவையானஅளவு உப்பு
  11. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  13. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் கேரட், முட்டைகோஸ் ஐ கிரேட்டர் வைத்து துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பிரெட் துண்டுகளை தண்ணீரில் லேசாக முக்கி எடுத்து தண்ணீர் இல்லாமல் கையில் நன்கு பிழிந்து எடுத்து வைக்கவும்.

  2. 2

    ஒரு பவுலில் பிழிந்து எடுத்த பிரெட்டை சேர்த்து இதில் நறுக்கி வைத்த வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தக்காளி, முட்டைகோஸ், கேரட், அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி கைகளால் பிசைந்து வைத்து கொள்ளவும். ஒருவேளை தண்ணீர் தேவைப்பட்டால் தெளித்து பிசைந்து வைத்து கொள்ளவும்.

  3. 3

    வானலில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.பிரெட் பக்கோடா தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes