இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#nutrient2

பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன்

இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)

#nutrient2

பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
ஐந்து நபர்கள்
  1. -100 கிராம்பாசிப்பருப்பு
  2. -100 கிராம்துவரம் பருப்பு
  3. -10சின்ன வெங்காயம்
  4. 2தக்காளி பழம்
  5. 7பச்சை மிளகாய்
  6. 1முருங்கைக்காய்
  7. 1கத்தரிக்காய்
  8. 1கேரட்
  9. 1உருளைக்கிழங்கு
  10. 1 1\2 டேபிள் ஸ்பூன்சாம்பார் பொடி
  11. 1\4ஸ்பூன்மஞ்சள் தூள்
  12. -1 டேபிள் ஸ்பூன்நெய்
  13. 1 துண்டுகட்டி பெருங்காயம்
  14. 1 ஸ்பூன்கடுகு
  15. எலுமிச்சை அளவுபுளி
  16. 1 ஸ்பூன்சீரகம்
  17. 1துண்டுபட்டை
  18. 1 ஸ்பூன்முழு மிளகு
  19. -1- துண்டுகல்பாசி பூ
  20. 1கொத்துகறிவேப்பிலை
  21. தேவையானஅளவுகடலெண்ணெய்
  22. தேவையானஅளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாசிப்பருப்பு துவரம்பருப்பு இரண்டையும் எடுத்து நன்கு கழுவி குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எண்ணெய், ஒரு பெருங்காயத் துண்டு போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.

  2. 2

    முருங்கைக்காய், கத்தரிக்காய், கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் இவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் பச்சை மிளகாயை நீளமாக கீறிக் எடுத்துக் கொள்ளவும். தாளிப்பதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். குக்கரை திறந்து வெந்த பருப்பில் மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி கொதிக்க விடவும்

  3. 3

    புளியை சிறிது தண்ணீரில் ஊற வைத்து கரைத்து புளிக்கரைசல் யும், சாம்பார் பொடியையும் வெந்த பருப்பு கலவையில் சேர்த்து சேர்த்து மிதமாக வைத்து கொதி வர விடவும்

  4. 4

    மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் மற்றும் எண்ணெய் காய வைத்து கடுகு, பட்டை, பூ, மிளகு இவற்றை தாளிக்கவும்

  5. 5

    பிறகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். மிளகாய் நன்கு வெள்ளையாக வரும் வரை மிதமான தீயில் வைத்து வதக்கவும்

  6. 6

    பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் பிறகு எல்லா காய்களையும் சேர்த்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் நன்கு வதக்கவும்

  7. 7

    பிறகு சிறிதளவு உப்பு காய்க்கு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி அதனை கொதித்துக் கொண்டிருக்கும் பருப்பில் எடுத்து சேர்க்கவும்

  8. 8

    இப்போது சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அடிபிடிக்காமல் கிளறி மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் விசில் போட்டு ஒரு விசில் விட்டு அடுப்பை அணைக்கவும். ரொம்ப டேஸ்டான ஒரு இட்லி சாம்பார் ரெசிபி. நெய் ரோஸ்ட்க்கு இந்த சாம்பார் ரொம்ப டேஸ்டா இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes