குக்கர் முட்டை பிரியாணி (Cooker muttai biryani Recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாக வெட்டி பொன்னிறமாக எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 2
முந்திரி,கிஸ்மிஸையும் நெய்யில் பொரித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
- 3
அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
- 4
முட்டையை வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். தோலுரித்த முட்டையை லேசாக நான்கு புறமும் கீறி வைக்கவும்.
- 5
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்,ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து மிதமான தீயில் கலந்துவிட்டு அதில் முட்டையை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்
- 6
குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் பட்டை கிராம்பு லவங்கம் ஏலக்காய் சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம்,கீறிய பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
- 7
பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
- 8
ஒரு பாத்திரத்தில் தயிர் தயிர் சேர்த்து அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 9
இந்த தயிர் கலவையை குக்கரில் வதக்கிய வெங்காயம் தக்காளி உடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பிறகு அதில் நறுக்கிய கொத்தமல்லி புதினா இலைகளை சேர்த்து உப்பு சரிபார்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
- 10
20 நிமிடங்கள் ஊற வைத்த அரிசியை வடிகட்டி இந்தக் கலவையோடு சேர்த்து கிளறி விட வேண்டும். ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் தண்ணீர் சேர்த்து பொரித்தெடுத்த முட்டைகளை இந்த அரிசி கலவை மேல் அடுக்கி குக்கரை மூடி வைக்க வேண்டும்.
- 11
ஆவி வந்ததும் குக்கரில் விசில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் வைத்து இறக்கிவிடவும்
- 12
பின்னர் 15 நிமிடங்கள் கழித்து குக்கர் மூடியைத் திறந்த பொரித்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் முந்திரி பருப்பினை மேலாகத் தூவி கிளறிவிடவும். சுவையான முட்டை பிரியாணி தயார். இந்த பிரியாணியை தயிர் வெங்காயம், கத்திரிக்காய் கொத்சு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
முட்டை பிரியாணி🥚🥚 (Muttai biryani Recipe in Tamil)
#nutrient2முட்டையில் அனைத்துவிதமான விட்டமின்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நாட்டுக் கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள அட்டகாசமான மினரல் சத்துக்களே காரணம். கால்சியம், சல்ஃபர், மெக்னீசியம், ஜிங்க் போன்ற மிக முக்கியமான 11 மினரல்கள் இருக்கின்றன. BhuviKannan @ BK Vlogs -
-
சோயா முட்டை பிரியாணி (Soya muttai biryani recipe in tamil)
#onepotகுழந்தைகள் சோயா சப்பிடவில்லையெனில் இந்தமாதிரி அரைத்து சேர்த்து பிரியாணி சுவையில் த௫ம்போது வி௫ம்பி உண்பர் சுவையான புதுவித சாதம் Vijayalakshmi Velayutham -
-
முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
-
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
-
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி (Street food Plain biryani recipe in tamil)
#Thechefstory #ATW1எம்டி பிரியாணி எல்லா நகரங்களிலும் ஒரு முக்கியமான ஸ்ட்ரீட் புட். நான் செய்துள்ளது மங்களூர் ஸ்டைல் ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி. மிகவும் அருமையான சுவையில் இருந்தது. Renukabala -
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
-
தாமரை விதை பிரியாணி (Makhana biryani recipe in tamil)
#BRதாமரை விதை உணவுகள் விரத நாட்களில் பெரும்பாலான மக்கள் சாப்பிடுவார்கள். இது நிறைய நேரம் பசி தாங்கி உடம்பை சோர்வடையாமல் இருக்கச் செய்யும். உடல் எடையை குறைக்க உதவும். எனவே இங்கு சத்தான தாமரை விதை பிரியாணி செய்து பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
கமெண்ட்