# அம்மா#nutrient2 கொள்ளு இட்லி

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 200 கிராம் கொள்ளு பருப்பு
  2. 100 கிராம் அரிசி

சமையல் குறிப்புகள்

  1. 1

    இரண்டு பொருள் போதும் இந்த கொள்ளு இட்லிக்கு.முதலில் கொள்ளு பருப்பை சுத்தம் செய்து கல் இல்லாமல் அரித்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை தனியாக 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    ஐந்து மணி நேரம் நன்கு ஊறிய கொள்ளுப் பருப்பை முதலில் தனியாக அரைக்கவும். இது நன்கு பொங்கி உளுந்து போல் வரும் அப்பொழுது அரிசியை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த மாவை இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் வரை தங்களது விருப்பத்திற்கேற்ப புளிக்க வைக்கவும்.

  4. 4

    இதனை உப்பு சேர்த்து நன்கு கரைத்து இட்லி தட்டில் இட்லியாக ஊற்றி எடுக்கலாம் இப்பொழுது சுவையான கொள்ளு இட்லி தயார்😋😋😋

  5. 5

    இதற்கு தொட்டுக் கொள்வதற்கு பொட்டுக்கடலை தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி மிகவும் சுவையாக இருக்கும்

  6. 6

    தங்கள் விருப்பப்படி தேவையானால் சீரகம் சின்ன வெங்காயம் வரமிளகாய் சேர்த்து அரைத்து இதில் கலந்து தோசைகளாக வார்த்து கொள்ளலாம் அல்லது மிகவும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் கடுகு கருவேப்பிலை கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தாளித்து மாவில் சேர்த்து இட்லியாக தோசை சுட்டுக் கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes