கரைச்ச மாவு ரொட்டி (Karaicha maavu rotti recipe in tamil)

Aalayamani B
Aalayamani B @cook_19909202

#goldenapron3
நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய மிகவும் மென்மையான கரைத்த மாவு ரொட்டி செய்வது மிகவும் எளிது சாப்பிட பரோட்டா போன்று மிகவும் சுவையாக இருக்கும் இதனை நம் குழுவில் உள்ளவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்முதலில்.
இரண்டு பேருக்கு
  1. 200 கிராம் மைதா
  2. 50 கிராம் கோதுமை மாவு
  3. கால் கப் காய்ச்சிய பால்
  4. சிறிதுசமையல் சோடா
  5. தேவையான அளவுஉப்பு
  6. நாலு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்முதலில்.
  1. 1

    முதலில் மைதா கோதுமை மாவு உப்பு சமையல் சோடா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும். அத்துடன் பால் மாற்றம் தோசை மாவு பதத்தை விட கெட்டியாக இருக்க கூடிய அளவிற்கு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்

  2. 2

    இந்த மாவை மூடி வைத்து ஒரு மணி நேரம் கழித்து எடுக்கவும். இப்பொழுது மீண்டும் நன்கு கலக்கி விட்டு விடவும். பிறகு ஒரு தோசை தவாவில் வெண்ணெய் தடவி அதன் மேல் இந்த மாவை ஒரு குழிக்கரண்டி ஊற்றவும்

  3. 3

    ஒரு கரண்டி மாவை எடுத்து நடுவில் வைத்து தோசைக்கல்லை லேசாக ஆட்டி விட வட்டவடிவமாக நடுவில் நன்கு ஆடைகளுடன் இருக்கும் ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு சிறிது நெய் தடவி னால் புஸ்சென்று பாராட்ட போல் அழகாக வரும் இதனை கறி குழம்பு குருமா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aalayamani B
Aalayamani B @cook_19909202
அன்று

Similar Recipes