தக்காளி சாஸ் (Thakkaali sauce recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

தக்காளியில் இரும்பு சத்து அதிகம் அதிகமாக உள்ளது. தக்காளி தினமும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதிலுள்ள இரும்பு சத்து நேரடியாக உடம்பில் கலக்கும்.#nutrient3

தக்காளி சாஸ் (Thakkaali sauce recipe in tamil)

தக்காளியில் இரும்பு சத்து அதிகம் அதிகமாக உள்ளது. தக்காளி தினமும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதிலுள்ள இரும்பு சத்து நேரடியாக உடம்பில் கலக்கும்.#nutrient3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணி நேரம்
பதினைந்து பேர்
  1. 1கிலோ தக்காளி
  2. 1/2கப் வினிகர்
  3. 1டீஸ்பூன் தனி மிளகாய் தூள்
  4. 2டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை (உங்கள் விருப்பம் வெள்ளை சர்க்கரையும் உபயோகிக்கலாம்)
  5. உப்பு

சமையல் குறிப்புகள்

அரைமணி நேரம்
  1. 1

    நன்கு பழுத்த தக்காளியை, கழுவி பொடியாக நறுக்கி, குக்கரில், அரை கப் தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் விடவும்.

  2. 2

    சூடு ஆறியவுடன், ஹாண்ட் ப்ளெண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு நன்கு அறைத்தெடுக்கவும்.

  3. 3

    பின்னர் ஒரு வடிகட்டியில் ஊற்றி வடித்தெடுக்கவும்.

  4. 4

    கடாயை சூடு செய்து, வடித்து வைத்துள்ள தக்காளி சாறினை ஊற்றி, அத்துடன் வினிகர், சர்க்கரை, மிளகாய் தூள், உப்பு சேர்த்து, கெட்டியாகும் வரையில் மிதமான சூட்டில் வைத்துக்கொண்டு கலக்கவும்.

  5. 5

    பதினைத்து நிமிடம் போதுமானது.கெட்டித்தன்மை வந்துவிடும்.

  6. 6

    இப்போது ஒரு ஸ்பூன் சாஸ் எடுத்து ஒரு தட்டில் ஊற்றி, ஓரமாக சாய்தால், தண்ணீர் பிரிந்து வாராமல் கெட்டியாக இருந்தால், சாஸ் தயாராகிவிட்டது என புரிந்து ஸ்டவ்வில் இருந்து இறக்கிவிடவும்.

  7. 7

    கடையில் வாங்கும் அதே சுவையில், இப்போது சுவையான தக்காளி சாஸ் உங்கள் வீட்டிலே தயார்.

  8. 8

    கடையில் சென்று வாங்காமல் நாமே வீட்டில் மிகவும் சுலபமாக, சுகாதார முறைப்படி தயார் செய்யலாம்.குழந்தைகள் விருப்பப்படி,சாப்பிட்டாக் கொடுக்கலாம். எல்லோருக்கும் பிடித்த அளவு, ரொட்டி, கட்லட் போன்ற எல்லா வகையான சிற்றுண்டிகளுடனும் சாப்பிடலாம்.

  9. 9

    செய்வது மிக மிக சுலபம். அனைவரும் முயற்சிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes