கமர் கட் மிட்டாய் (Kamarkat mittai recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

கமர் கட் காலம் காலமாக எல்லோரும் விரும்பி சாப்பிடும் மிட்டாய். பாரம்பரிய இனிப்பு.
#arusuvai1

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணி நேரம்
12பேர் தலா ஒன்ற
  1. 1கப் தேங்காய் துருவல்
  2. 3/4கப் வெல்லம் (பொடித்தது)
  3. 1டீஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

அரைமணி நேரம்
  1. 1

    முதலில் தேங்காய் துருவலை மிக்ஸியில் சேர்த்து, நீர் ஏதும் சேர்க்காமல் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும்.

  2. 2

    வெல்லத்தை ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு, அடுப்பில் ஏற்றி ஒரு கொதி வந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி நுரைக்க விடவும்.

  3. 3

    நுரை வந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்கு சுருள வதக்கி, எண்ணை சேர்த்து, கலவை முற்றிய நிலைக்கு வந்தவுடன் இறக்கவும். (தேங்காய் கலவை நுரைத்து வரும்)

  4. 4

    இந்த சமயம் பார்த்து, இறக்கி ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டவும். கொஞ்சம் சூடு உள்ளபோதே உருண்டைகளாக உருட்டவும். ***கையில் கொஞ்சம் அரிசி மாவு பிரட்டிக் கொண்டு (சூடு குறையும்) உருண்டைகளை உருட்டவும்.

  5. 5

    இப்போது கிராமிய மணத்துடன் சுவையான கலக்கல் கமர் கட் சுவைக்கத் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (3)

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes